தென் ஆப்ரிக்காவில் தமிழ் கலாச்சார விழா

Subscribe to Oneindia Tamil

ப்ரிடோரியா (தென் ஆப்ரிக்கா):

தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் இணைந்து அங்குள்ள லோடியம் பகுதியில் நடத்தியகுழந்தைகளுக்கான தமிழ் கலாச்சார விழாவில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

லோடியம் என்ற இடத்தில் நடந்த இந்த கலாச்சார விழாவில் தென் ஆப்ரிக்கா முழுவதிலுமிருந்து 400 க்கும்மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள்.

இந்த கலாச்சார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நாகா மோட்லே கூறுகையில், தென் ஆப்ரிக்காவில் நடந்த கலைநிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் (அனைவரும் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) கலந்துகொண்டது மிகப்பெரிய சாதனையாகும்,

கடந்த வருடம் நாங்கள் நடத்திய கலைவிழாவில் கலந்து கொண்ட குழந்தைகளை விட இந்த வருடம் கலந்துகொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த பள்ளிக்குழந்தைகள், நாங்கள் நடத்திய கலாச்சார விழாவில் கலந்து கொண்டு, இயல்,இசை, நாடகம் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை அசர வைத்து விட்டனர்.

இதற்காக 41 பள்ளிகளிலிருந்து வந்திருந்த பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இது போன்ற கலைநிகழ்ச்சிகளால் தென் ஆப்ரிக்க, தமிழக மக்களின் உறவு இன்னும் மேம்பாடடைவதாகவேநாங்கள் கருதுகிறோம். தென் ஆப்ரிக்க மண்ணில் தமிழர்கள் பல சாதனைகள் புரிவது எங்களுக்கு மிகவும்பெருமையாக உள்ளது.

தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிதான் நடந்தது. வரும் செப்டம்பரில் பெரியவர்ளுக்கான பலபோட்டிகள் நடத்தவுள்ளோம் என்றார்.

தென் ஆப்ரிக்க தேசிய தமிழர் சம்மேளன தலைவர் மிக்கி ஷெட்டி கூறுகையில், நாங்கள் நடத்தியகுழந்தைகளுக்கான கலாச்சார விழாவில் தென் ஆப்ரிக்காவிலுள்ள பல தமிழ் பள்ளிகளிலிருந்து மாணவ,மாணவியரை பங்கேற்கச் செய்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் ஒத்துழைப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.டர்பனில் வரும் டிசம்பர் மாதம் உலக தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் ஷெட்டி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+