கருணாநிதி ஒரு தீய சக்தி: ஜெயலலிதா தாக்கு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியை தீய சக்தி என ஜெயலலிதா கூறியதையடுத்து தமிழக சட்டசபையில்அ.தி.மு.கவினருக்கும். தி.மு.கவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், ஆளுனர் உரை, அரசின் கொள்கை திட்டத்தின் முன்னோட்டமாக அமைந்திருந்தாலும், ஒருசில திட்டங்களைத் தவிர மற்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை,
இந்த அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆளுனர் உரையில் கூறப்பட்டிருந்தது.
77ம் ஆண்டு எம்.ஜி.ஆர். 4 முனைத் தாக்குதலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்தது. 1984ம் ஆண்டு அமெரிக்க மருத்துவமனையிலிருந்தே வெற்றி பெற்றார். அது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்தது.
13 ஆண்டு கால வனவாசத்திற்கு பின் கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்தது.
சென்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டிருந்தால் அதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாககருதப்படலாம்
அ.தி.மு.க பெற்றுள்ள வெற்றி சாதாரண கணக்கு ரீதியான தீர்ப்பு. கூட்டணி கட்சிளான த.மா.கா. , பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கென தனித் தனியாக ஓட்டு வங்கி உள்ளது. அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டுஅ.தி.மு.க.மதசார்பற்ற கூட்டணி என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியது.
ஜெயலலிதா (இடைமறித்து):
ஓட்டு வங்கி பற்றி ஆஸ்டின் பேசுவது தவறானது. அ.தி.மு.கவுக்கென தனியாக ஓட்டு வங்கி உள்ளது அதை யாரும்மறுக்க முடியாது. இதை ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் நிரூபித்து வருகிறோம்.
அ.தி.மு.கவால் வளர்ந்தவர்கள், அ.தி.மு.கவால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் அ.தி.மு.கவுக்குதுரோகம் செய்துவிட்டு தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஓட்டு வங்கியை நம்பி லாபமடைந்துசட்டசபைக்கு வந்திருக்கும் ஆஸ்டினுக்கு ஓட்டு வங்கி பற்றி பேச தகுதி இல்லை .
1991ம் ஆண்டு ஆஸ்டினை நான்தான் எம்.பி.ஆக்கினேன். அவர் 1996ம் ஆண்டு சில துரோகிகளோடு சேர்ந்துபார்லிமென்ட் ஆட்சியை உடைத்தார். நாடாளுமன்றத்தில் இருக்கும் அ.தி.மு.க. அலுவலகம் பறி போனது. இன்றுவரை மீட்கப்படவில்லை. இவ்வாறு கட்சிக்கு துரோகம் செய்தவர் இன்று கூட்டணி குறித்து பேசுகிறார் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications