தமாகா கவுன்சிலரை அடித்த திமுக கவுன்சிலர்
கோவை:
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, தமாகா கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடந்தது. இக் கூட்டத்திற்கு மேயர் கோபாலகிருஷ்ணன்தலைமை வகித்தார். கமிஷனர் மக்வானா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழிவாசிக்கப்பட்டது.
உறுதிமொழிக்குப்பின் அதிமுக கவுன்சிலர் தாமரைச் செல்வி, மேயரிடம் புதிதாக அரசு பதவி ஏற்றுள்ளது அதற்குவாழ்த்துத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனக் கூறினார். இதற்கு தமாகா, காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவுதெரிவித்தனர்.
திமுக கவுன்சிலர்கள் கோவை தெற்கு மண்டல அலுவலகம், பயணியர் விடுதிக்கு மாற்றப்பட்டது குறித்துகவுன்சிலர்களிடம் தெரிவிக்கவில்லை. இது கவுன்சிலர்களுக்கு உரிமைப் பறிப்பு விஷயம். இதற்கு முதலில்பதிலளித்து விட்டு வாழ்த்துத் தீர்மானம் கொண்டு வாருங்கள் எனக் கூறினர்.
ஆனால், அதிமுக கூட்டணிக் கவுன்சிலர்கள் முதலில் நாங்கள் சொன்னது தான் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி மேயரை முற்றுகையிட்டனர். அவர்களைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்களும் மேயரிடம் வந்தனர்.அப்போது இருதரப்பினரிடையேயும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பில் முடிந்தது.
பின்னர் கவுன்சிலர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அப்போது திமுக கவுன்சிலர் நாராயணசாமி, தமாகாகவுன்சிலர் பொன் ஆனந்தகுமாரிடம் வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை பளார் என அறைந்தார்.இதையடுத்து கூட்டததில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட ரகளைக்குப் பிறகு கூட்டத்தை ஒத்தி வைத்துமேயர் உத்தரவிட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications