மத்திய அரசிடம் நிதியுதவி கோருகிறது நாஸ்காம்
சென்னை:
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சி காணவும், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்மேற்கொள்ளும் வகையிலும் 100 மில்லியன் டாலர் வெஞ்சர் கேபிடல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் நாஸ்காம்கோரியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் பிராண்ட் நேம் கிடைக்கச் செய்யமத்திய அரசு ரூ 200 மில்லியன் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் நாஸ்கோம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாஸ்கோம் தமிழக அரசின் உதவியுடன் சென்னையில், ஐடி சர்வீஸஸ் 2001 என்ற இரண்டு நாட்கள் கருத்தரங்கைநடத்தியது.
கருத்தரங்கில் கலந்து கொண்டு நாஸ்கோம் ஒருங்கிணைப்பாளர் அருண் சேத் பேசுகையில், இந்த கருத்தரங்குநடத்துவதன் நோக்கமே 2008 ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் பேருக்குவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மூலம் அடுத்த 12 மாதங்களுக்குள் 500 மில்லியன் டாலர்கள் லாபம்ஈட்டுவோம்.
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையங்கள் செய்யும் சேவைகள் குறித்து அடுத்த 6 மாதங்களில்அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளோம் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் தரக் கட்டுப்பாட்டின் (குவாலிட்டி கன்ட்ரோல்) முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ரூ 51.3 பில்லியனில் ஐ.டி.ஆராய்ச்சி மையம்:
இதற்கிடையே, மகாராஷ்டிரத்தில் மும்பை-புனே அருகே தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ51.3 பில்லியன் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், அமெரிக்காவின்மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட்டும் (எம்.ஐ.டி), மத்திய அரசும் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைஉருவாக்கவுள்ளன.
இதற்காக மீடியா லேப் ஏசியா 80 சதவீதம் நிதியுதவி அளிக்கவுள்ளது. மீதி தொகையை மத்திய அரசு அளிக்கிறது.
இதுகுறித்து வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறைமற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம்தொடங்குவதற்கு மீடியா லேப், முதல் ஒரு வருடத்துக்கு ரூ. 650 மில்லியன் நிதியுதவி அளிக்கிறது.
பின்னர் அடுத்தகட்டமாக அடுத்த 10 வருடத்துக்குள் மீடியா லேப்பும், மத்திய அரசும் சேர்ந்து 51.3 பில்லியனில்தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளோம். இந்த ஆராய்ச்சிமையத்தை மும்பை-பூனா தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆராய்ச்சி மையத்தால் இந்தியாவில் உள்ள பல பொறியியல் வல்லுனர்கள் பயனடைவார்கள் என்றார்பிரமோத் மகாஜன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications