காண்ட்ராக்டரிடம் கமிஷன்: ஸ்டாலின் மீது நடவடிக்கை
சென்னை:
சாலை காண்ட்ராக்டில் கமிஷன் பெற்றதாகக் கூறப்பட்ட சென்னை மேயர் ஸ்டாலின் மீது சட்டப்படி, நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சாலை கான்டிராக்டில்கமிஷன் பெற்றதாக காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி கொடுத்த புகாரில் இதுவரை திமுக முன்னாள்எம்.பி.பரசுராமன் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் சென்னை மேயர் ஸ்டாலினுக்கு தொடர்பிருக்கிறதா என்று எதுவும் தெரியாது. அவர் கமிஷன் பெற்றிருந்தால்அவர் மீது சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், பரிதி இளம்வழுதி, முன்னாள் எம்.பி.பரசுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுபழிவாங்கும் நோக்கத்துக்காக அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மேல் கொடுத்த புகாரின்அடிப்படையில்தான் இது நடந்தது.
சென்னையில் ரவுடியிசமும், கட்டப்பஞ்சாயத்தும் ஒழிக்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின்பிறந்தநாளுக்கு பனகல் பூங்காவில் இடம் அளிக்கப்படவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.
ரவிச்சந்திரன் என்ற வக்கீல் பனகல் பூங்காவில் பொதுக்கூட்டமோ, விழாவோ நடத்துவதற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில்உள்ளது.
அதனால்தான் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கிலும் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து எனக்குஎதுவும் தெரியாது என்றார் முத்துக்கருப்பன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications