தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
நாங்கள் அவர்கள் கூறுவதையும், அவர்கள் பிரச்சனையும் கவனமாக கேட்கிறோம்.தற்கொலை என்பது உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவாகும். நாங்கள்தற்கொலைதான் பிரச்சனைக்கு முடிவல்ல என்பதை அவர்களுக்கு எடுத்து கூறுகிறோம்.
17 வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள்தான் தற்கொலைக்கு அதிக அளவில்பலியாகிறார்கள். சில மாணவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். மற்றும் சிலர் தேர்வில் பெரும் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்துஅந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்பவர்களில் பலரும் இறக்க விரும்புவதில்லை. அவர்கள் ஒருகுறிப்பிட்ட சமயத்தில் சமாளிக்க முடியாத கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும்முடிவை எடுக்கிறார்கள்.
ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் சோர்வடையும் நேரத்தில் அவர்களுக்கு தன்னம்பிக்கையைஊட்ட வேண்டும். குடும்பமே அவர்களை ஓதுக்கிவிட்டால் அவர்களூக்கு யார்ஆதரவு? அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
கடும் சிக்கலில் இருப்பவர்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பவர்கள் தங்கள்துயரத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குயாராவது ஆதரவு தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள்எதிர்பார்க்கும் ஆறுதல், ஆதரவு கிடைத்தால் அவர்கள் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள் மன பாரம் குறையும். இது தவாறன முடிவெடுக்கும்முயற்சியையும் தடுக்கும்.
இதுவரை 1 லட்சம் பேர் எங்கள் நிறுவனத்தில் உதவி கேட்டு வந்துள்ளனர். ஒருநாளுக்கு குறைந்த பட்சம் 25 முதல் 30 தொலைபேசி அழைப்புகள் எங்களிடம் உதவிகேட்டு வருகின்றன.
எங்கள் நிறுவனம் இதுவரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டுவந்தது. எங்கள் நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை குறிக்கும்விதமாக இந்த மாதம் 26ம் தேதி முதல் 15 நாட்களுக்கு எங்கள் நிறுவனம் 24மணிநேரமும் செயல்படும்.
தேர்வில் தோல்வியடைந்துள்ள மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுவதை தடுக்கும்முக்கிய நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் எண்ணத்துடன் 1986ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications