சர்வதேச நாடுகளிடம் உதவி கோருகிறார் சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப்புலிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க உதவுமாறு சர்வதேச நாடுகளை இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டுள்ளர்.
நார்வே தூதுக்குழுவினர் இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வரும் இனக் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் முயற்சியில்ஈடுபட்டனர்.
ஆனால் விடுதலைப்புலிகள் தங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என நிபந்தனைவிதித்தனர். இந்த நிபந்தனையை இலங்கை அரசு ஏற்கவில்லை. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசு 1998ம் ஆண்டு விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது. அமெரிக்க, இங்கிலாந்துஅரசுகளும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க உதவுமாறு உலக நாடுகளைஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்புக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காம்போலாவில் நடந்த விழாவில் கலந்து கொண்டு சந்திரிகாபேசினார். அங்கு உலகிலேயே மிக புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலை போன்ற சிலையை நிறுவதற்கான அடிக்கல்நாட்டினார்.
அதன் பின் அவர் பேசுகையில், பிரபாகரன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. போராடுவது என்றதீர்மானத்திலேயே இருக்கிறார்.
நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமான எந்த நிபந்தனையையும் ஏற்க இலங்கை அரசு தயாராக இல்லை.விடுதலைப்புலிகள் விதித்த நிபந்தனைகளில் இரண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிராக நான் என்றும் நடந்து கொள்ள மாட்டேன்.
இலங்கை அரசு என்றுமே அமைதியைத்தான் விரும்புகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புலிகள்விதிக்கும் நிபந்தனைகள் அவர்கள் தங்களை போருக்கு நன்கு தயார் செய்து கொள்வதற்கான ஒரு வழிமுறைஎன்றார்.
முன்னதாக சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல் நாட்டு பிரதிநிதிகள் மத்தியில் சந்திரிகா பேசுகையில், தனி நாடு கேட்டு போராடிவரும் விடுதலைப்புலிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைப்பதுதான் உலக நாடுகள் இலங்கைக்குசெய்யும் பெரும் உதவியாகும்.
1994ம் ஆண்டு நான் பதவிக்கு வந்தபின் விடுதலை புலிகளை பேச்சுவார்தைக்கு வருமாறு அழைத்தேன். ஆனால்அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
நார்வே தூதுக்குழுவினர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எடுத்த முயற்சிக்கும் புலிகள் ஒத்துழைப்பு தரவில்லை.அப்போது அவர்கள் என்னை கொலை செய்யும் முயற்சியில்தான் ஈடுபட்டனர். ஆனாலும் இலங்கை அரசுஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகத்தான் இருக்கிறது.
இனக் கலவரத்தை ராணுவ நடவடிக்கை மூலமாக முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசு விரும்பவில்லை.அதனால் இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் விஷயத்தில் வளைந்து கொடுத்துதான் நடந்துவருகிறது.
ஆனாலும் விடுதலைப் புலிகள் விதிக்கும் நிபந்தனை காரணமாக அரசின் முயற்சிகள் பலனில்லாமல் போய்வருகிறது.
இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த எப்போதுமே தயாராக இருக்கிறதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications