மதுரையில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்
மதுரை:
மதுரை அண்ணாநகரில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை வைத்திருந்த சிவகாசியைச் சேர்ந்த லட்சுமணனைசி.பி.சி.ஐ.டி. போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இந்தக் கள்ள நோட்டுக்கள் அனைத்தும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று விசாரணையில்தெரிய வந்தது.
கேரளாவிலிருந்து கள்ளநோட்டுக்களை வாங்கி வந்து, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஓட்டல்கள்மற்றும் பிராந்தி கடைகளில் புழக்கத்தில் விட்டு வந்தார் லட்சுமணன்.
இது தொடர்பாக, மதுரை சி.பி.சி.ஐ.டி.யைச் சேர்ந்த கள்ளநோட்டுத் தடுப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.உடனடியாக அவர்கள் செயல்பட்டு, மதுரை மாநகர் முழுவதும் கடந்த 2 நாட்களாகத் தீவிர சோதனை நடத்தினர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை, அண்ணாநகரில் உள்ள சுகுணா ஸ்டோர் பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக வந்து கொண்டிருந்த லட்சுமணனைப் போலீஸார் விசாரித்ததில், அவரிடம்ஒரு 100 ரூபாய் கள்ளநோட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய்கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லட்சுமணனும் உடனே கைது செய்யப்பட்டு, மதுரை முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் மேலூரில் கள்ளநோட்டுக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களும் கேரளாவிலிருந்துதான் கள்ளநோட்டுக்களை வாங்கி வந்து புழக்கத்தில் விட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications