நேபாள அரசர், குடும்பம் படுகொலை: இளவரசர் வெறிச்செயல்
காட்மாண்டு:
நேபாள அரசர் பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அரசரின் மகனாலேயேசுட்டுக் கொல்லப்பட்டனர்.
தனக்கு திருமணம் ஆகாத விரக்தியினால் இளவரசர் திபேந்திரா (30) இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்த அரச குடும்ப விருந்து நிகழ்ச்சியின் போது நடந்தது.
நேபாள அரண்மனையில் வெள்ளிக்கிழமை இரவு விருந்து நடந்தது. இந்த விருந்தில் அரச குடும்பத்துக்கு மிகவும்நெருக்கமான உறவினர்கள் கூடியிருந்தனர். அப்போது அரசரின் மகன் திபேந்திராவுக்கும், அரசருக்கும் இடையேதிபேந்திராவின் திருமண விஷயம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த திபேந்திரா (30), அரசர் பீரேந்திரா (55), அரசி ஐஸ்வர்யா (52), அரசரின் சகோதரிகள் 2பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டார்.
அரசர் உள்பட 7 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படுகாயமடைந்தனர். அரசரும், அரசியும் உடனடியாகஅருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவுஉயிரிழந்தனர்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அரச குடும்பத்தினர் அனைவரும் அரண்மனையில் கூடுவதுவழக்கம். அதே போல் ஜூன் 1 ம் தேதி இரவு அரச குடும்பத்தினர் விருந்துக்காகக் கூடிய போது இச்சம்பவம்நடந்தது.
இளவரசர் திபேந்திரா முதலில் தன் குடும்பத்தாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு பின்னர் தன்னைத் தானேசுட்டுக் கொண்டார்.
அரசர் பீரேந்திரா உடம்பில் பாய்ந்த குண்டுகள் அனைத்தையும் வெளியே எடுத்த பின்பும் அவரைப் பிழைக்கவைக்கமுடியவில்லை என்று ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
இளவரசர் திபேந்தரா சுட்டபோது, முதலில் காயமடைந்தவர் அரசரின் சகோதரி சாந்தி ராஜ்ய லட்சுமி சிங் (60).அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திபேந்திராவின் திருமணம் தொடர்பாக நடந்த தகராறில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகவும், இந்தச்சம்பவத்தின்போது அவர் குடித்திருந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்துஉறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இளவரசர் திபேந்திராவுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அவர் மிகவும் மனச்சோர்வில் இருந்ததாகவும்,அதனால் அவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தனது திருமணம் தள்ளிப்போவதைக் கண்டு இளவரசர் திபேந்திரா விரக்தியடைந்த நிலையில் இருந்ததால்அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட திபேந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குஅங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து கோமாவில் உள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications