அரண்மனையில் 2 யானைத் தந்தங்கள் திருட்டு

Subscribe to Oneindia Tamil

கிராம மக்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வீரப்பனைத் தேடி போலீஸ் பட்டாளத்துடன் தானேதலைமை தாங்கி வேட்டையைத் துவக்கினார் தேவாரம். பல குழுக்களாக போலீஸ் படையைப் பிரித்து பலமுனைகளில் தேடுதல் வேட்டையைத் தீவிரமாக்கினார் தேவாரம்.

போலீஸ் படையின் கிடுக்கிப் பிடியால், வீரப்பனின் பல கூட்டாளிகள் ஒவ்வொருவராக பிடிபட்டனர்; அல்லதுகொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் இருந்த வீரப்பனின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியானது.சுமார் 10 மாத காலம் தேவாரம் காட்டுக்குள் இருந்தார்.

1994ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி விபத்தில் சிக்கினார் தேவாரம். அவர் மீது லாரி ஏற்றிக் கொல்லமுயன்றதாகக் கூறப்பட்டது. அத்துடன் வீரப்பன் வேட்டையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார் தேவாரம்.

தனது அதிரடிப்படைக் காலத்தின்போது வீரப்பன் கும்பலை 5 பேர் கொண்ட சின்னக் குழுவாக பலம் குறைத்தபெருமை தேவாரத்திற்கு உண்டு. விபத்தில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால் வீரப்பனை உயிருடனோ அல்லதுபிணமாகவோ தேவாரம் பிடித்திருப்பார் என்று போலீஸ் வட்டாரத்தில் இப்போதும் கூட பேசப்படுவதுண்டு.

வீரப்பனுடன் ஒருமுறை நேரடியாகவே துப்பாக்கிச் சண்டையில் தேவாரம் ஈடுபட்டதாகக் கூறுகிறார்கள். அப்போதுடி.எஸ்.பி.சிதம்பரநாதனை வீரப்பன் கடத்திச் சென்று விட்டான். அவரை மீட்பதற்காக 25 நாட்கள் வரை பேச்சுநடந்தது. வீரப்பனின் தம்பி பேபி வீரப்பன் மூலமாக இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் தரவில்லை.

இந்த நிலையில் தேவாரம் தலைமையில் ஒரு போலீஸ் குழு நீலகிரி மலையில் மறைந்திருந்த வீரப்பனைத் தேடிச்சென்றது. 5000அடிக்கும் மேலான உயரத்தைக் கொண்ட மலையில் அந்தக் குழு கஷ்டப்பட்டு அலைந்தது.இறுதியில் வீரப்பனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர் தேவாரம் குழுவினர். அப்போது அவர்களைப் பார்த்துவிட்ட வீரப்பன் தலைமையிலான குழு அவர்களை துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. தேவராம்தலைமையிலான குழுவும் பதிலுக்குச் சுட்டது. இந்த சண்டையின் இறுதியில் சிதம்பரநாதனை விட்டுவிட்டு வீரப்பன்குழுவினர் தப்பிச் சென்றனர்.

வீரப்பனை தேவாரம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் வந்தது. அதிமுக போய் திமுக வந்தது.தேவாரத்தின் வேட்டைக்கும் முடிவு வந்தது. அவர் போலீஸ் அகாடமி இயக்குநராக மாற்றப்பட்டார். வீரப்பனுக்கும்பெரிய நிம்மதி ஏற்பட்டது. வீரப்பனைத் தேடும் பணி தொய்வடைந்தது. வீரப்பனுடன் பல புதிய குழுக்களுக்குத்தொடர்பு ஏற்பட்டது. தமிழ்த் தீவிரவாதம் தருமபுரி மாவட்டத்தில் தலைதூக்கியது.

இந்த நிலையில் கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டார். வீரப்பனுடன், தமிழ்த் தீவிரவாதிகள்கைகோர்த்திருப்பது தெரிய வந்தது. வீரப்பன் விவகாரம் தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பெரிய தலைவலியைக்கொடுத்தது. வீரப்பனைப் பிடிக்க முயன்று தடுக்கப்பட்ட தேவாரம் மக்கள் மனதில் வந்து போனார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றவுடனேயே, எப்போது தேவாரம் குறித்த நியமனஅறிவிப்பு வரும் என்ற பேச்சு எழுந்து விட்டது. அதற்கேற்றார் போல தேவாரம் புதிய அதிரடிப்படைத்தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். விரைவில் காடு புகவுள்ளார் தேவாரம்.

தேவாரம்தான் தன்னுடைய முதல் எதிரி என்று வீரப்பனும், வீரப்பனைப் பிடிக்காமல் விட மாட்டேன் என்று சபதம்எடுத்திருக்கும் தேவாரமும் மீண்டும் சந்திக்கவுள்ளனர். இந்த முறை வெல்லப் போவது யார் என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+