இந்திரா காந்தி பல்கலை. புதிய வெப்சைட் முகவரி
டெல்லி:
மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் தனது வெப்சைட் முகவரியை மாற்றியுள்ளதாக இந்திரா காந்திதிறந்த வெளி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் தனது வெப்சைட் முகவரியை மாணவ, மாணவியருக்குப்பயனளிக்கும் வகையில் மாற்றியுள்ளது.
அதாவது www. ignou.org என்ற பழைய முகவரியிலிருந்து www.ignou.ac.in என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த முகவரியைப் பயன்படுத்தி வெப்சைட்டுக்குள் நுழையும் மாணவர்கள் சில நொடிகளிலேயே படிக்கவேண்டிய பாடங்கள், தேர்வு விவரங்கள், கால அட்டவணைகள், தேர்வு முடிவுகள் மற்றும் பல விவரங்களைப்பெற்றுக் கொள்ளலாம்.
வெப்சைட்டில் சேர்க்க வேண்டிய, விவரங்கள், கருத்துக்களையும் மாணவர்கள் கூறலாம்.
இந்திரா காந்தி திறந்த வெளிப்பல்கலைக்கழக வெப்சைட்டில், பல்கலைக்கழகம் செயல்படும் விதம்,பாடத்திட்டங்கள் உள்பட அனைத்து விவரங்களும் இருக்கும்.
மேலும் மாணவர்கள் சேர்க்கை, தேர்வு விவரங்கள் போன்றவையும் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றிருக்கும்.
கடந்த வருடங்களில் உள்ள தேர்வு விவரங்கள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஆகியவை குறித்தவிவரங்களும் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றிருக்கும்.
இந்த வருடம் நவம்பர் மாதம் இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் சார்பில் மாநாடு நடத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் 20பள்ளிகளின் விவரங்கள் குறித்தும் இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நிர்வாகத்துறை படிப்புக்கள், கல்வியியல், சுகாதார அறிவியல், தொழில் நுட்பம், மனித வள மேம்பாடு, சமூகஅறிவியல், கம்யூட்டர், தகவல் அறிவியல் போன்ற பல துறை படிப்புக்கள் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications