இந்தியக் கிட்னிகளுக்கு கனடாவில் மவுசு
டொரான்டோ:
இந்தியர்களின் கிட்னிகளை வாங்குவதற்காக, நூற்றுக்கணக்கான கனடா நாட்டினர்நாள்தோறும் இந்தியாவிற்குப் பறந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
கிட்னியை வாங்குவதோ விற்பதோ குற்றம் என்று கனடாவில் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் இந்தியா மட்டுமின்றி சீனா, பிலிப்பைன்ஸ் போன்றநாடுகளுக்கும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கனடாவில் கடந்த 1999-ல் நடைபெற்ற 1,010 கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைகளில்,379 பேருக்கு உயிருடன் இருந்தவர்களிடம் இருந்தே கிட்னி பெறப்பட்டதாகப்புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் 1997-99 கணக்கெடுப்பின்படி, 536கனடா நாட்டினர் கிட்னி கிடைக்காமல் இறந்துள்ளனர்.
உயிருடன் இருப்பவர்களிடமிருந்து பெறப்படும் கிட்னியே ஆரோக்கியமானதாகஇருக்கும் என்று மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். இதனால் இறந்தவர்களிடம்இருந்து கிட்னி எடுப்பது முழுவதுமாகக் குறைந்துவிட்டது. எவ்வளவு விலைகொடுத்தாலும் சரி, உயிருடன் இருப்பவர்களிடம் இருந்தே கிட்னியைப்பெற்றுவிடுவது என்ற ஒரே நோக்கில் கனடா நாட்டினர் கிட்னி வேட்டையாடிவருகின்றனர்.
இதனால் கிட்னியை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என்ற உத்தரவை கனடாஅரசு பிறப்பித்தது. கிட்னியை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் 1,000 டாலர்அபராதமும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம்கூறுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு கிட்னி வாங்குவது குறைய ஆரம்பித்தது.
இந்நிலையில், ஒரு நோயாளியைத் தற்செயலாகப் பரிசோதித்த கனடா நாட்டுமருத்துவமனையைச் சேர்ந்த ஒரு டாக்டர், கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்குஅந்நோயாளி உட்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில்,இந்தியாவில்தான் அந்நோயாளி இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்து கொண்டார்என்பது தெரிய வந்தது.
இந்தியாவில் பணத்துக்காக கிட்னியை விற்கின்றனர் என்ற செய்தியும் அப்பட்டமாகவெளிவந்தது. மேலும் நடந்த பல விசாரணைகளின் மூலம், ஏராளமான பேர் இந்தகிட்னி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் தெரியவந்தது.
சீனாவில் உள்ள ஷாங்காய் என்ற பெரிய நகரத்தில்தான் கிட்னி வியாபாரம்கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. கிட்னி தேவைப்படுவோர், இங்குள்ள ஒருநிறுவனத்தில் 5,000 டாலர் பதிவுக் கட்டணமாகச் செலுத்துகின்றனர்.
ஒரு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு கனடா நாட்டினர் 50,000 டாலர் முதல்1,45,000 டாலர் வரை பணத்தைச் செலவழிக்கின்றனர்.
கனடா நாட்டினரின் இந்தச் செயல்களை சர்வதேச மாற்று அறுவைச் சிகிச்சை சங்கமும்உலக சுகாதார நிறுவனமும் கடுமையாகக் கண்டித்துள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications