ராணுவம் தாக்கி 10 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 புலிகளும், ராணுவ வீரர்ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். வேலியோயாவில் உள்ள ஊஞ்சல்காடிபகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 8 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதே போல் திரிகோணமலை அருகே கந்தாலை பகுதியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளஆலியோலுவா பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள முகமலை மற்றும் பொன்னார் பகுதிகளில் முறையே இரண்டு விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர். கிலாலியில் விடுதலைப்புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் 2ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications