வாஜ்பாய்க்கு அறுவைசிகிச்சை தொடங்கியது
மும்பை:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு வியாழக்கிழமை காலை வலது காலில் மூட்டுமாற்றுஅறுவை சிகிச்சை தொடங்கியது.
நியுயார்க் டாக்டர் சித்தரஞ்சன் ரனவதே தலைமையில் மும்பை வந்துள்ள டாக்டர்கள் குழு சுமார் ஒரு மணி நேரம்பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
டாக்டர் சித்தரஞ்சன் ரனவதேயுடன் மும்பை டாக்டர்கள் நந்து லாட் மற்றும் ஹரீஷ் பென்டே ஆகியோரும்பிரதமருக்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு பிரதமர் வாஜ்பாய்க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைதொடர்ந்து 10 நாட்கள் அளிக்கப்படும்.
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள டாக்டர்கள் குழுவில் டாக்டர் என்ரிகோ காட்சிலோ, டாக்டர் சிரீஷ் குப்டே,டாக்டர் கிளப்டன் கியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்டியோயார்திரிடிஸ் எனப்படும் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த பிரதமர் வாஜ்பாய்க்கு கடந்த வருடம்அக்டோபர் 10 ம் தேதி மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் இடதுகாலில் அறுவைசிகிச்சை நடந்ததுநினைவிருக்கலாம்.
முன்னதாக, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக புதன்கிழமை பிற்பகல் பிரதமர் வாஜ்பாய் மும்பை ப்ரீச் கேன்டிமருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடப்பதையொட்டி, ப்ரீச் கேன்டி மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களுக்குப்பிறகே பிரதமரை பார்வையாளர்கள்பார்க்க முடியும் என்று மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications