சேலம் அருகே அதிசய ருத்திராட்ச கொட்டை
சேலம்:
300 ஆண்டு காலம் பழமையான 1.25 கிலோ எடையுள்ள ருத்திராட்ச கொட்டையை சேலம் அருகேயுள்ளதாரமங்கலத்தில் இருக்கும் ஒருவர் வைத்திருக்கிறார். இது சில அதிசயங்களையும் நிகழ்த்தி வருகிறது.
ஆன்மிகத்தில் ஈடுபட்டு, துறவறம் பூணும் ஆன்மீகவாதிகள் ருத்திராட்ச கொட்டையை அணிவார்கள். இதைஅணிவதற்கு முன் இதை கோவிலில் வைத்து பூஜை செய்த பின் அணிவார்கள். ருத்திராட்ச கொட்டை உடல்வலிமையையும், மன வலிமையையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக ருத்திராட்ட கொட்டையில் 5 அல்லது 6 கோடுகள் காணப்படும். இவை 5 முகம், 6 முகம் கொண்டகொட்டைகள் என அழைக்கப்படும். எடையும் 5 கிராம் முதல் 15 கிராம் வரைதான் இருக்கும்.
ஆனால் சேலத்திற்கு அருகே தாரமங்கலத்தில் இருக்கும் ஒருவர் 1.25 கிலோ எடையுள்ள ருத்திராட்ச கொட்டையைவைத்துள்ளார். இவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. இது நேபாளம் அருகே டேராடூனில் தனக்குகிடைத்தது என இவர் கூறினார்.
இந்த ருத்திராட்ச கொட்டையை ஆராய்ந்த ஆன்மீகவாதிகள் இது 300 ஆண்டுகாலம் பழமை வாய்ந்ததாகஇருக்கும் என கூறுகின்றனர்.
இந்த ருத்திராட்ச கொட்டையில் ஒரே ஒரு முகம்தான் காணப்படுகிறது. இந்த ருத்திராட்ச கொட்டையில் பல்லி,பாம்பு வடிவங்கள் இயற்கையாகவே அமைந்துள்து. இதில் கல்வெட்டு போன்ற எழுத்து வடிவங்களும் உள்ளது.
இந்த ருத்திராட்ச கொட்டை இருக்கும் இடத்திற்கு மாதத்திற்கு 3 முறை நல்லபாம்பு வந்து செல்வதாக ருத்திராட்சகொட்டையை வைத்திருப்பவர் கூறுகிறார்.
இந்த ருத்திராட்ச கொட்யிைன் அடிப்பாகம் மற்றும் மேல்பாகத்தில் தனித்தனியாக ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துஅழுத்தி பிடித்தால் இது பம்பரம் போல் வேகமாக சுற்றுகிறது.
வெள்ளைத்துணியை தரையில் போட்டு அதில் ருத்திராட்ச கொட்டையை வைத்து அதன் மேல் வில்வ இலைகளைபோட்டால், 5 நிமிடத்தில் வில்வ இலைகளை தள்ளிவிட்டுவிட்டு ருத்திராட்ச கொட்டை மேலே வந்து விடுகிறது.
ருத்திராட்ச கொட்டையின் அற்புதம் குறித்து கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த ஒருவர் இந்த ருத்திராட்சகொட்டையை ரூ 1.50 லட்சம் விலை கொடுத்து வாங்க முன் வந்துள்ளார்.
ஆனால் ருத்திராட்ச கொட்டையின் உரிமையாளர் ரூ 3 லட்சம் கொடுத்தால் ருத்திராட்ச கொட்டையை விற்கசம்மதிப்பதாக கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications