தப்புக்கணக்கு போட்டு விட்டேன்: வைகோ
திண்டுக்கல்:
தேர்தல் பிரச்சாரத்தின்போது கூடிய கூட்டத்தைப் பார்த்து அவை அனைத்தும் வாக்குகளாக மாறும் என நானும்தப்புக் கணக்குப் போட்டு விட்டேன் என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.
திண்டுக்கல்லில் நடந்த மதிமுக ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக 30 இடங்களில் கூட போட்டியிடத் தகுதியற்றது எனக் கருதி திமுக 30இடங்களை ஒதுக்க மறுத்தது. ஆனால் திமுகவே 30 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் என்னைக் காணவும், எனது பேச்சை கேட்கவும் கூடினர். இந்தக் கூட்டத்திற்குவந்த அனைவரது வாக்குகளும் நமக்கு கிடைக்கும் என நானே தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். பலதொகுதிகளில் நமது வாக்கு வங்கி சரிந்து விட்டது. கடந்த முறை நம்முடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் இருந்தது கூடசாதகமானதாக இருந்தது.
எது எப்படி இருந்தாலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாகசெயல்பட்டுள்ளனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது எனக் கருதியுள்ளனர். எனவே , அவர்கள்அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். ஆனால், அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள்வாக்களிக்கவில்லை.
புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் இல்லாமல் திமுக தனித்து நின்று போட்டியிட்டிருந்தால், தொகுதிக்கு 10ஆயிரம் வாக்குகள் கூட பெற்றிருக்க மாட்டார்கள். பல தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பார்கள்.
மதிமுக தொடர்ந்து தனது லட்சியப் பாதையில் செயல்படும். மதிமுகவின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாத திமுக,அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீட்டில் பாரபட்சமாக நடந்து கொண்டது.
தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் சுற்றுக்களாக ஆட்சியை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளன. இந்தவிஷச் சுற்றுக்களை மதிமுக உடைத்தெறியும்.
கட்சிக்காக நான் தினம் 18 மணி நேரம் உழைத்து வருகிறேன். தினசரி ஒரு மணி நேரம்கூட கட்சிக்காக செலவிடமுடியாதவர்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம். அவ்வாறு விலகினால் கட்சிக்காகப் பாடுபடுவோருக்குவழி கிடைக்கும். அவர்களுக்கு வழி விடுங்கள் என்றார் வைகோ.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications