முதல் டெஸ்ட்: இந்தியா அபார ஆட்டம்

Subscribe to Oneindia Tamil

பொலாவாயோ (ஜிம்பாப்வே):

இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் அன்றுஇந்தியர்களின் ஆதிக்கம் தலை தூக்கி இருந்தது. இந்திய பவுலர்களின் அதிரடிப் பந்து வீச்சில் ஜிம்பாப்வே 173ரன்களுக்கு சுருண்டது.

இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமைஜிம்பாப்வே, பொலாவாயோவிலுள்ள குவீன்ஸ் விளையாட்டரங்கில் தொடங்கியது.

டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே, முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத்வீசிய முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்து அதிரடியாக அணியின் ஸ்கோரை துவக்கினார். ஸ்ரீநாத் மிகச்சிறப்பாக பந்து வீசவில்லை.

டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் நெஹ்ரா நன்கு பந்துவீசினார்,. அவர் கய் விட்டாலின் விக்கெட்டைக்கைப்பற்றினார். கய் விட்டால் 6 ரன் எடுத்திருந்த போது அவுட் ஆனார். அப்போது அணியின் எண்ணிக்கை 9.

இவரை தொடர்ந்து வந்த கார்லிஸ்சும் சிறப்பாக விளையாடவில்லை. துவக்க ஆட்டக்காரராக விட்டாலுடன்களமிறங்கிய இப்ராஹீம், நெஹ்ராவின் பந்து வீச்சை எதிர்த்து விளையாட முடியாமல் தடுமாறினார்.

விக்கெட் கீப்பர் பிடித்த ஒரு காட்ச்சும், ஒரு எல்.பி.டபிள்யூ அப்பீலும் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ந்து, ஸ்ரீநாத்திற்கு பதிலாக ஜாகீர்கான் பந்து வீச அழைக்கப்பட்டார். முதன் முறையாக இரண்டு இடது கைவேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவிற்காக பந்து வீசினர்.

ஆனால் இருவருமே சிறப்பாகப் பந்து வீசவில்லை. மீண்டும் ஸ்ரீநாத் பந்து வீச அழைக்கப்பட்டார். அப்போதும்அவர் எதிர்பார்த்த அளவு சிறப்பாக பந்து வீசவில்லை. இருந்தாலும் ஜிம்பாப்வே அணி அதிகமான ரன்குவிக்கவில்லை.

இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பந்து வீச அழைக்கப்பட்டார். ஜிம்பாப்வே ஆடுகளம் சிங்குக்குசாதகமாக அமையவில்லை. ஆனாலும் அவரது சிறப்பான ஃபீல்டிங்கால் இப்ராஹீம் ரன் அவுட் ஆனார். அப்போதுஅவர் 12 ரன்கள் எடுத்திருந்தார். அணியின் எண்ணிக்கை 46.

இதையடுத்து விக்கெட்டுக்கள் தொடர்ந்து விழ ஆரம்பித்தன. அணியின் எண்ணிக்கை 65ஆக இருந்த போது, ஜாகீர்கான் வீசிய பந்தில் லட்சுமணிடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், கார்லிஸ்.

ஆண்டி பிளவர் மட்டுமே சிறப்பாக ஆடி 51 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் சரியாக ஆடவில்லை.

ஜிம்பாப்வே அணி 173 ரன்களுக்கு அனைத்து ஆட்டக்காரர்களையும் இழந்தது.

இந்தியத் தரப்பில் ஸ்ரீநாத் 15 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

12 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் நெஹ்ரா.

ஜாகீர் கான் 11 ஓவர்கள் பந்து வீசி 54 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைத் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார்.ஹர்பஜன் சிங் 20.5 ஓவர்கள் பந்து வீசி 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைத் தட்டிச் சென்றார்.

இதையடுத்து இந்திய அணியினர் ஆட ஆரம்பித்தனர். துவக்க ஆட்டக்காரர்களாக சடகோபன் ரமேஷும் சிவசுந்தர்தாசும் களமிறங்கினர். ஆனால் துவக்கத்திலேயே ரமேஷ் ஆட்டமிழந்தார். அணியின் எண்ணிக்கை 2 ஆக இருந்தபோது, வாடாம்பா வீசிய பந்தில் க்ளீன் போல்டு ஆனார் ரமேஷ். அந்த 2 ரன்களையும் அவர்தான் எடுத்திருந்தார்.

தொடர்ந்து ஆடிய வி.வி.எஸ். லக்ஷ்மண் மளமளவென்று ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். ஆனாலும்நீண்டநேரம் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 38 பந்துகளில் 28 ரன்களை அவர் குவித்திருந்தபோது,ஓலோங்கோவின் பந்து வீச்சில் விட்டாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவர் மொத்தம் 5பவுண்டரிகள் அடித்திருந்தார்.

தாஸ் 29 ரன்களும் தண்டுல்கர் 15 ரன்களும் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது இந்திய அணியின்எண்ணிக்கை 80 ஆக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+