உதயமானது தந்தை பெரியார் திராவிடர் கழகம்
கோவை:
"தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் கோவையில் உதயமானது. வீரமணியின் நடவடிக்கையைப் பிடிக்காதஇரண்டு எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்த 3 பேர் இதனை உருவாக்கியுள்ளனர்.
திராவிடர் கழகத்தில் வீரமணிக்கு எதிர்க் கோஷ்டியாக கோவையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், தமிழ்நாடு திராவிடர்கழகம் என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார். இதே போன்று ஆனூர் ஜெகதீசன் தலைமையில் திருவாரூர்தங்கராசுவைத் தலைவராகக் கொண்டு ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் பெரியார் திராவிடர்கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றது தொடர்பாகவும், அவரை விடுவிக்க நடந்த நடவடிக்கையின்போதுஏற்பட்ட பிரச்னையால், கொளத்தூர் மணியை திராவிடக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துவிலக்கினார் வீரமணி. இதையடுத்து கொளத்தூர் மணியும் வீரமணிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்தார்.
தற்போது இந்த 3 அணியைச் சேர்ந்தவர்களும் இணைந்து புதிய அணியைத் துவக்கியுள்ளனர். கொளத்தூர் மணி,கே.ராமகிருஷ்ணன், மற்றும் ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் கோவையில் வியாழக்கிழமை புதிய கட்சியைத்தொடங்கினர். இந்தக் கட்சியின் கொடி, மேலும், கீழும் கறுப்பாகவும், மத்தியில் சிவப்பும் இருக்கும்.
புதிய இயக்கத்தைத் தொடங்கிய 3பேரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் திராவிடக் கொள்கைக்கு எதிராக இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை. வீரமணியின் நடவடிக்கைக்குஎதிர்ப்புத் தெரிவித்து இந்த இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். தி.க.வின் சொத்துக்களையும், தி.கவையும்கைப்பற்றுவது எங்கள் நோக்கம் அல்ல. பெரியாரின் கொள்கைளை மீண்டும் சீர்தூக்கி நிறுத்தி, அதனைமக்களிடையே பரவச் செய்வது தான் எங்களது நோக்கம். எங்களைப் பார்த்தாவது வீரமணி திருந்த வேண்டும்.
பெரியாரின் கொள்கைளை தீவிரமாகப் பரப்ப, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். பெரியாரின்கொள்கையில் பிடிப்பு கொண்ட இளைஞர்களை ஒன்று திரட்டுவோம். இதற்காக வரும் ஜூலை 13ம் தேதி முதல்ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறோம். இயக்கத்தை வலுப்படுத்த தேவையானநடவடிக்கைகளில் இறங்குவோம்.
அடுத்து, டர்பன் நகரில் ஏற்பட்டுள்ள இன ஒதுக்கல் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என வலியுறுத்தி23ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இன ஒதுக்கலும், ஜாதியபிரச்னையும் ஒன்றே. இதனை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications