இந்தியா-ஜிம்பாப்வே 2வது டெஸ்ட் இன்று துவக்கம்
ஹராரே: (ஜிம்பாப்வே)
இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது, இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டிஜிம்பாப்வேயிலுள்ள ஹராரேயில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவும்,ஜிம்பாப்வேயும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது. 15ஆண்டுகளுக்குப்பின் அயல்நாட்டில் விளையாடி இந்தியா வென்ற முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் ஆடவிருக்கும் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்றால் அயல்நாடுகளில் விளையாடி டெஸ்ட் தொடரை வென்ற புகழையும் பெறும்.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற தீவிர நோக்கத்துடன் ஜிம்பாப்வே களமிறங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகி விடும். இருஅணிகளுமே வெற்றி பெறவில்லை என்ற நிலை வரும்.
ஹராரே ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதேசமயம் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாகவும் அமையாது.
இந்திய தரப்பில் காயம் அடைந்துள்ள துவக்க ஆட்டக்காரரான சடகோபன் ரவேஷுக்கு பதிலாக ஹேமங் பதானிஇடம் பெறக் கூடும் என கூறப்படுகிறது.
அதே போல் ஜிம்பாப்வே அணியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஓலாங்கோவுக்கு பதிலாக டிராவிஸ்ஃப்ரண்ட்ஸ் களமிறங்குவார் என தெரிகிறது.
இந்த டெஸ்ட் போட்டி குறித்து ஜிம்பாப்வே அணித்தலைவர் ஸ்டிரீக்கும், அணியின் பயிற்சியாளர் கார்ல்ராக்கிமேனும் கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை அடையாளம் கண்டு கொண்டுஅவற்றை சரி செய்து கொண்டு விட்டோம் என்றனர்.
டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என இந்தியாவும், டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டும் எனஜிம்பாப்வேயும் களமிறங்குவதால் இந்த டெஸ்ட் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹராரே ஆடுகளம் இதுவரை ஜிம்பாப்வேக்கு சாதகமாக இருந்து வந்திருக்கிறது. 1992ம் ஆண்டு நடைபெற்றடெஸ்ட் போட்டியை டிரா செய்யவே இந்தியா மிகவும் போராட வேண்டியதிருந்தது.
அதேபோல் 1998ம் ஆண்டு நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. இதுவரைஜிம்பாப்வே வென்ற 5 டெஸ்ட் போட்டிகளில் 4 டெஸ்ட் போட்டிகள் ஹராரேயில் நடந்ததுதான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications