ஜெ.வீட்டில் நுழைய தினகரன், பாஸ்கரனுக்குத் தடை
சென்னை:
சசிகலாவின் அக்காள் மகனும் அ.தி.மு.க எம்.பியான தினகரனும், ஜெயா டிவியை நிர்வாகித்து வரும் பாஸ்கரனும்போயஸ் தோட்டத்திற்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவரது கணவர் நடராஜன். நடராஜனுக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையே நீன்டகாலமாக சுமுகமான உறவு கிடையாது. மோதல்தான் இருந்து வருகிறது.
சென்ற புதன்கிழமை சசிகலாவின் அக்காள் மகனும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனும்,அவரது தந்தை விவேகானந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் தான் வசிக்கும் போயஸ் தோட்டத்திற்குள் தினகரனும், பாஸ்கரனும் முன் அனுமதியின்றிநுழையக் கூடாது என உத்தவிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பலரும் தினகரனையும், பாஸ்கரனையும் சந்தித்து ஆசி பெற்றதாக உளவுத்துறை மூலமாக ஜெயலலிதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இரவு நேரங்களில் இவர்கள் ரகசியமாக நடராஜனை சந்திப்பதாகவும், போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்துகொண்டு அங்கு வரும் அமைச்சர்களை அதிகாரம் செய்து வருவதாகவும ஜெயலலிதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதே நிலை தொடருமானால் , இம்முறையும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுஎழக்கூடும். அது தன்னை பாதிக்கக்கூடும் என்பதால் ஜெயலலிதா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்என கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications