For Daily Alerts
ரூ.25 லட்சம் பஞ்சு மூட்டைகள் தீயில் நாசம்
அரியலூர்:
அரியலூரில் ஒரு பஞ்சு கிட்டங்கியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள்எரிந்து சாம்பலாயின.
அரியலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பஞ்சு கிட்டங்கியில், விவசாயிகளிடம்அடமானமாகவும் விலைக்கும் வாங்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
இக்கிட்டங்கியில், வெள்ளிக்கிழமை காலை திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்துப் பஞ்சு மூட்டைகளும்எரிந்து சாம்பலாகின. அந்தக் கிட்டங்கியின் கட்டடமும் மோசமாகச் சேதமடைந்து, இடிந்து விழும் தருவாயில்உள்ளது.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!