இனி உதயசூரியன் வேண்டாம்.. திமுகவிற்கு ஷாக் தந்த மனிதநேய மக்கள் கட்சி.. தீர்மானத்தை கவனிச்சீங்களா
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவாக சென்றுவிட்டன. இதனால் திமுக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் வரிசையில் திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இதில் நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின் தலைவர் எம்எச் ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார். மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது களமிறங்கி தோல்வியடைந்தார். இவர்கள் 2 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்நிலையில தான் தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் தேர்லில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் எனறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கூட்டணியில் உள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது அவர்கள் பெயரளவில் வேண்டுமானாலும் பிற கட்சி எம்எல்ஏ என்று சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் உண்மையில் அவர்கள் திமுகவின் எம்எல்ஏக்களாக தான் கருதப்படுவார்கள். சட்டசபையில் திமுகவின் கொறடா உத்தரவை மீற முடியும். இதனால் சட்டசபையில் திமுக எடுக்கும் முடிவுக்கு நிச்சயம் ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் கட்டுப்பட வேண்டும். மீறினால் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் திமுகவின் கொறடா உத்தரவை பின்பற்ற வேண்டியது இல்லை.சட்டசபையில் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு வழங்கலாம். திமுக கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன. இதனால் தொங்கு சட்டசபை வந்த நிலையில் அவர்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடிந்தது.
அதிலும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெகவுடன் சேர்ந்த காங்கிரஸ் 2 அமைச்சர்களையும், வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக போன விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றது. ஆனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட அவர்களால் தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சர் பதவியை பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தான்.
இந்நிலையில் தான் இனி வரும் தேர்தல்களில் மனிதநேய மக்கள் கட்சி தனிச்சினத்தி்ல போட்டியிடும் என்று அந்த கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது திமுகவிற்கு அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நாகப்பட்டினம் தொகுதியில் எம்எச் ஜவாஹிருல்லா திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மொத்தம் 56,305 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவரைஎதிர்த்து களமிறங்கி தவெக வேட்பாளர் 46,524 வாக்குகள் வாங்கி 9,781 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் தனகா கதிரவன் 41,586 வாக்குகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார்.
அதேவேளையில் மணப்பாறை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கிய அப்துல் சமாத் மொத்தம் 61,355 வாக்குகள் வாங்கி 3 ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தொகுதியில் தவெகவின் கதிரவ்ன 83,041 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 81,615 வாக்குகள் வாங்கி 2ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications