அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பாஜக வரவேற்பு.. நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில், "முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முன்னாள் அமைச்சர் தரங்கெட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். இதுவே சரியான நடவடிக்கை என்பதோடு வேறு யாரும் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும்" என்று வரவேற்றுள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏன்

கடந்த ஜூன் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பபில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைத் தெரிவித்தார்.

BJP welcomes Anitha Radhakrishnan s arrest Post by Narayanan Thirupathi

அதேபோல் இன்னொரு முறை தூத்துக்குடியில் பேசும் அனிதா ராதாகிருஷ்ணன் போது, நான் அனிதா ராதாகிருஷ்ணன் தான். ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை. இந்துக்கள் ஓட்டு வேண்டும் என்கிறபோது விஜய் என்றும், கிறிஸ்தவர்கள் ஓட்டு வேண்டும் என்கிறபோது ஜோசப் விஜய்யாக ஆகிவிடுகிறார். மக்களை ஏமாற்றி, சின்ன பிள்ளைகளை வைத்து விஜய்க்கு ஓட்டு போட சொல்லி வெற்றி பெற்றுள்ளனர்.

இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்கு தான் இந்த ஆட்சி ஓடும். திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். எங்கள் தலைவர் மீண்டும் முதலமைச்சராவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் எங்களால் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். ராத்திரியோடு ராத்திரியாக பெட்டியை கட்டி காங்கிரஸ் ஓடிவிட்டது. ராகுலை அடுத்த பிரதமர் என்று சொன்னது எங்கள் தலைவர். விஜய்யின் கைபிடித்து நிற்பது எவ்வளவு பெரிய மானக்கேடு.

காங்கிரஸை மொத்தமாக காலி செய்ய வேண்டும். தமிழகத்தில் அந்தக் கட்சி இருக்க கூடாது. அனிதா ராதாகிருஷ்ணனை இந்து ஆக நினைக்கின்றீர்கள். நாங்கள் மதம், ஜாதியை பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் மதத்தை பார்த்துவிட்டீர்கள். இனி ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றுசொன்னால் ஓட்டு போடுவீர்கள் தானே. இது விளங்குமா. எங்கள் தலைவரை முறைக்கலாமா நீங்கள். அவர் மதத்தை பார்த்தாரா. ஜோசப் என்றவுடன் ஓட்டு போட்டுவிட்டீர்கள். என்னவோ எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி" என்று கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூரில் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், ஆத்தூர் தவெக நகரச் செயலாளர் செல்வம் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இவ்வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகி வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+