தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடியில் சதி திட்டம்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் தவெக குதிரை பேரம் நடத்துவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில் ஐபிடிஎஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடியில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக எம்எல்ஏ இளைராஜாவிடம் பேரம் பேசியதாக திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி கார்த்தி, ரமேஷ், செல்வன், மணப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜு, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தவெக எம்எல்ஏ இளைராஜாவிடம் பேரம் பேசி, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ரூ. 35 கோடி வரை பேரம் பேசியதாக திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி கார்த்தி, ரமேஷ், செல்வன், மணப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜு, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்ட பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் பெற பேசுவது, முயற்சி செய்வது, குற்றத்துக்கு உடைந்தையாக இருப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருவல்லிகேணி காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
கைதானவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனம் மூலமாக அக்கட்சியின் எம்எல்ஏக்களிடம் பேரம் பேச முதல்கட்டமாக ரூ. 180 கோடி திரட்டப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்காக சென்னை கிண்டியில் சுமார் ஒரு வாரம் நட்சத்திர ஹோட்டலில் தங்கி தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications