எவன் இருந்தா என்ன, போனா என்ன.. விசிக, ஐயூஎம்எல் குறித்து ஆர்.எஸ் பாரதி ஒருமையில் விமர்சனம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜயுடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல் மீதும் திமுக விமர்சனம் வைக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே விசிக, ஐயூஎம்எல் மீது ஆ. ராசா கடுமையான சொற்களால் விமர்சனம் செய்திருந்தார். திமுகவின் மற்றொரு மூத்த நிர்வாகியான ஆர்.எஸ். பாரதி விசிக, ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக ஒருமையில் விமர்சித்துள்ளார்.

பின்னடைவு ஏற்படும் அபாயம்
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "விஜய் பதவியேற்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதை நாங்கள் சுட்டி காட்டியபோது திருத்திக் கொள்கிறோம் என்று அமைச்சர் ஒருகூர் கூறினார். ஆனால் மீண்டும் மீண்டும் அதே செயல்கள் தொடர்கின்றன.
கல்வி, மருத்துவம், பொருளதாரத்தில் எங்கள் ஆட்சியில் தமிழகம் நம்பர் 1 இடத்தில் இருந்தது. அடுத்த 5 வருடங்கள் தமிழகம் இன்னும் கீழே போகும் என்கிற அச்சம் உள்ளது. எங்கள் தலைவர் மிகவும் கஷ்டப்பட்டு பொருளதாரத்தில் டபுள் டிஜிட்டில் வந்துவிட்டார். எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதோ, பொருளாதாரமும் பின்னடைவை சந்திக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விசிக ஐயூஎம்எல் மீது ஒருமையில் விமர்சனம்
பி.எம் ஶ்ரீ திட்டத்தை எதிர்ப்பது சாத்தியப்படாது என்பது போல் தான் இந்த ஆட்சியின் செயல்பாடு இருக்கிறது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன எவன் போனால் என்ன. அதைப்பற்றி கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை" என்று கூறியுள்ளார். விசிக, ஐயூஎம்எல் குறித்து அவர் ஒருமையில் விமர்சித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications