கைதிகள் துன்புறுத்தப்படவில்லை: முன்னாள் டி.ஜி.பி.
சென்னை:
குண்டு வெடிப்பு சம்பதந்தமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை.இதில் போலீசார் யாரும சம்பந்தப்படவில்லை என முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சர்மா கூறியுள்ளார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த ப்ரீத்தி பாஸ்கர் என்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் உள்துறைச் செயலாளர்சாந்தா ஷீலா நாயர், முன்னாள் டி.ஜி.பி. சர்மா, சிறைத்துறை அதிகாரி கே.வி.எஸ் மூர்த்தி ஆகியோர் சிறையில்இருக்கும் முஸ்லிம் கைதிகளை தாக்க உத்தரவிட்டதாகவும், சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகள்துன்புறுத்தப்படுவதாகவும் புகார் செய்தார்.
இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகள் யாரும்துன்புறுத்தப்படவில்லை. இதற்கும் போலீசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் டி.ஜி.பி.சர்மாகூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள்தமிழகத்திலிருக்கும் பல சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது நான்தான்டி.ஜி.பியாக இருந்தேன்.
சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துவதாக கூறப்படுவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இது குறித்து என மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அபாண்டமானது.
இது தொடர்பாக எங்கு விசாரணை செய்தாலும் நான் எதிர் கொள்ள தயாராக இருக்கிறேன். இந்த புகார் தனிப்பட்டநபர் ஒருவரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகள் எவரும் புகார் கொடுக்கவில்லை. அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகநீதிமன்றத்திலும் கூறவில்லை. புகாரும் தெளிவாக இல்லை.
சிறையிலிருக்கும் கைதிகளை டி.ஜி.பிக்கள் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை நீதிமன்றம், சிறைத்துறைஅதிகாரிகள் உத்தரவு இல்லமாமல் போலீஸ் அதிகாரிகள் சிறையில் சென்று பார்க்க முடியாது. கைதிகளைசிறைத்துறை நிறுவனம்தான் கவனித்து வருகிறது.
கைதிகள் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போது கூட சிறைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்வதன்பேரில்தான், கைதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
சிறைக்குள் நடக்கும் எந்த சம்பவத்திற்கும் டி.ஜ.பி. பொறுப்பாக முடியாது. என் மேல் போலீசார் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்துள்ளது ஏன் என அவர்களிடம்தான் கேட்க வேண்டும். டி.ஜி.பியை குற்றம் சாட்டுவதுதூரத்தில் இருக்கும் எதையோ பிடிக்க பார்க்கப்படுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications