10,000 சாலைப் பணியாளர்களை நீக்க அரசு திட்டம்?
சென்னை:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிமுக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தங்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என தமிழக சாலைப் பணியாளர் சங்கத்தினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 10,000க்கும் அதிகமான சாலை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் சாலை அமைப்பது, மரங்கள்நடுவது, சாலைகளில் கறுப்பு வெள்ளை கோடு போடுவது, மரங்களில் வர்ணம் பூசுவது, சாலை ஓரங்களில்எச்சரிக்கை கற்கள் நடுவது உள்ளிட்ட பல சாலை பணிகளை செய்து வருகின்றனர்.
8 கிலோமீட்டர் சாலைப்பகுதிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் சாலைப் பணியாளர்கள் 40 வருடங்களாக பணி புரிந்துவருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ 1,500 கொடுகக்ப்பட்டது. பின் அரசு விதிப்படி ஊதியம்நிர்ணயிக்கப்பட்டது.
சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது குறித்து தமிழக அரச தீவிர ஆலோசனை செய்து வருகிறது.இந்நிலையில் தமிழக சாலைப்பணியாளர் சங்கத்தினர் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரத்தைவியாழக்கிழமை சந்தித்து மனு கொடுத்தனர்.
அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சாலைப் பணியாளர்களை நலனை கருத்தில் கொண்டு அவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது. இந்த பணியில்இருப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும்தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
சாலைப் பணியாளர்கள் பணி ஆபத்தானது. பல சமயம் அவர்கள் விபத்தையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறதுஎன கூறியுள்ளனர்.
இந்த மனுவின் நகல் முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சாலை பணியாளர்களை ஒட்டு மொத்தமாக நீக்கினால்சட்ட சிக்கல் ஏதேனும் ஏற்படுமா? அல்லது இதற்கு மாற்று ஏற்பாடு செய்யலாமா என்பது குறித்து அரசுஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
சாலைப்பணியாளர்கள் நிலை குறித்து எந்த விதமான முடிவையும் இன்னமும் அரசு எடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications