தங்கக் காசு புதையல்: சேலத்தில் பரபரப்பு
சேலம்:
சேலத்தில் வீடு கட்ட தோண்டிய இடத்தில் தங்கக் காசு புதையல் கிடைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் கைலாசர் நாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றிலும் பலஇடங்களில், இதற்கு முன் சிறு சிலைகள் மற்றும் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.
இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஒன்றில் பெருமாள் (70) என்ற விவசாயி குடிசை போட்டு குடியிருந்துவந்தார். இந்த நிலம் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். எனவே, அங்கு வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டது.இந்த குழியைத் தோண்டிய தொழிலாளர்கள், திடீரென கடப்பாரை உள்ளே சென்றதை உணர்ந்தனர். அங்கு வேறுஒரு பள்ளம் இருப்பதைக் கண்டு, அதை முழுமையாகத் தோண்டினர்.
அப்போது அங்கு இரண்டு பெட்டிகள் நிறைய தங்கக் காசுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1410 என்ற எண்பொறிக்கப்பட்ட கல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த தங்கக்காசுகளை பங்கு போட்டுக் கொள்ள தொழிலாளர்களும்பெருமாளும் முடிவு செய்தனர். ஆனால், அவற்றை பெருமாள் எடுத்துச் சென்று மறைத்து வைத்துக் கொண்டதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து தொழிலாளர்கள் மூலம் இந்த விஷயம் கசியத் தொடங்கியது. இதனால் கிராம மக்கள் அனைவரும்புதையல் கிடைத்துள்ளது குறித்து பரபரப்பாகப் பேசிக் கொள்கின்றனர். எனவே, இந்த புதையல் குறித்து தாசில்தார்தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கல்வெட்டில் 1410 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்தக் கல் 1410 ம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கும் எனக்கருதப்படுகிறது. விரைவில் இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications