ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தில் குண்டுவெடிப்பு
டெல்லி:
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சாஹேடான் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய தூதகரத்தில்குண்டுவெடித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் வியாழக்கிழமை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில்அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும்பத்திரமாக உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஈரான் போலீஸார் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கிடைக்கும்தகவல்களை ஈரானுக்குத் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறோம் என்றார்.
முன்னதாக, இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து ஈரான் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்தியில்,ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் தூதரக ஜன்னல் கதவுகள்உடைந்தன. தூதரகம் அருகிலுள்ள சில கட்டிடங்களும் சேதமடைந்தன.
குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications