மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு பொருட்காட்சி கடைகள் ஏலம் விட்டதில் ஊழல் நடந்துள்ளதாக, மதுரை மக்கள் தொடர்பு அதிகாரிசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடக்கும்போது, பொருட்காட்சியும் நடக்கும். இந்த ஆண்டும்சித்திரைத் திருவிழாவின் போது பொருட்காட்சி நடந்தது. அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது.

இதற்கிடையே நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது.அதிமுக ஆட்சியைப் பிடித்த நேரத்தில் பொருட்காட்சி நிறைவடைந்தது.

இதையடுத்து நடந்த பொருட்காட்சி நிறைவு விழாவில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் தொடர்பு அதிகாரி மீது புகார்:

இதற்கிடையே, மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி, பொருட்காட்சிக்கான கடைகளை ஏலம் விட்டதில்முறைகேடு செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு:

பொருட்காட்சிக்கான கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்துமாறுமதுரை கலெக்டருக்கு, மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில், மதுரை கலெக்டர் ஜஸ்பீர்சிங் பஜாஜ், பொருட்காட்சிக்கு கடைகள் ஏலம் விட்டதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இதில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மதுரை மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கானஉத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+