பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை: ஒருவர் கைது
ஈரோடு:
சாணம் எடுக்கத் தோட்டத்துப் பக்கம் சென்ற மாணவியை கற்பழித்துக் கொலை செய்ததாக ஒருவரைப் போலீசார்கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள புள்ளரங்கபாளையம் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் மாறன்.இவரது மகள் ஜோதிமணி (14). அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று அருகில்இருந்த தோட்டத்திற்குச் சாணம் எடுக்கச் சென்றார்.
அப்போது அங்கு பொன்னுச்சாமி என்பவரது மகன் சுப்ரமணி (31) குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒருடீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். தோட்டத்தில் யாரும் இல்லாத சமயம் என்பதால்ஜோதிமணியை வழிமறித்து தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த ஜோதிமணியை, கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டு தலைமறைவானார்சுப்ரமணி.
இதற்கிடையே ஜோதிமணியைத் தேடிச் சென்ற அவரது தம்பி மற்றும் சித்தப்பா ஆகியோர் ஜோதிமணி இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜோதிமணியின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சுப்ரமணியைக் கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications