இன்றைய தண்ணீர்ப் போராட்டம் .. கோடம்பாக்கம்
சென்னை:
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் தண்ணீர்ப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் இல்லாமல்பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர் பொதுமக்கள்.
நகரில் ஏதாவது ஒரு பகுதியில் தினசரி சாலை மறியல் போராட்டம் நடப்பது அன்றாட காட்சியாகி விட்டது.
செவ்வாய்க்கிழமை கோடம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் காலிக் குடங்களுடன் தண்ணீர் கோரிபோராட்டம் நடத்தினர்.
புதுத்தெரு, புலியூர்புரம் பஜனைத் தெரு, பூபதி தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காலிக் குடங்களுடன் போக்குவரத்து நெரிசல் மிக்க ஆற்காடுசாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், மாநகராட்சி, மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் விரைந்து வந்துபொதுமக்களை சமாதானப்படுத்தினர். உடனடியாக லாரிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்துமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சாலை மறியல் போராட்டம் காரணமாக அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications