27 ம் தேதி மதிப்பெண் பட்டியல்
சென்னை:
10ம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளி மூலம் எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இந்தமாதம் 27ம் தேதிவழங்கப்படும் எனவும், தனித் தேர்வாளர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இந்த மாதம் 29,30ம் தேதிகளில்வழங்கப்படும் எனவும் அரசு தேர்வுத் துறை இயக்குநர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை, சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 10ம் வகுப்புபொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலும்அறிவிக்கப்பட்டுவிட்டது.
மாணவ, மாணவியர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை இந்த மாதம் 27ம் தேதி தங்கள் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் விதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தனித் தேர்வு முடிவுகளும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுவிட்டது. ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்வுஎழுதியவர்களுக்கு சில தினங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
தனித்தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இந்த மாதம் 29, 30ம் தேதிகளில் வழங்கப்படும். அவர்கள்மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதிய பள்ளிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற்ற 5 நாட்களுக்குள்விண்ணப்பிக்க வேண்டும். மறு கூட்டல் விண்ணப்ப படிவங்கள் உரிய தேர்வுத் துறை அலுவலகத்திலும், இணைஇயக்குனர் அலுவலகங்களிலும் கிடைக்கும்.
மதிப்பெண் பட்டியல்களை திருச்சி, மதுரை, வேலூர், கோவை, திருநெல்வேலி, கடலூர், சென்னை ஆகியஇடங்களில் உள்ள தேர்வுத் துறை இயக்குநர்கள் உரிய பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். மாணவர்கள்பள்ளியிலிருந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications