வீரப்பனைப் பிடிக்க தேவாரம் புது வியூகம்
ஈரோடு:
சத்தியமங்கலம்முகாமில் தேவராம் மற்றும் ஐ.ஜி விஜயகுமார் ஆகியோர் வீரப்பனைப் பிடிக்க எடுக்கப்போகும்நடவடிக்கை மற்றும் புதிய வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
வீரப்பனைப் பிடிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான போலீசார் தேர்வு முடிந்துள்ளது. இந்தநிலையில் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் இந்த முறை கொரில்லா முறைத் தாக்குதல் உள்படபல்வேறு சிறப்பு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
வீரப்பன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க மாறு வேடத்தில் போலீசார் ஊடுருவி வருகின்றனர். குறிப்பாக கிராமவாசிகளைப்போலவும், மாடு மேய்ப்பவர்களைப் போலவும் உருமாறி தேடுதல் வேட்டைக்கு உளவுபார்க்கவுள்ளனர்.
மேலும், மாடு மேய்ப்போர் மற்றும் சிறுவர்களிடம் இவர்கள் உளவு கூறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வீரப்பன் வேட்டையை வரும் 21ம் தேதி முதல் அதிரடிப்படையினர் துவங்க உள்ளனர். இவர்களுக்கு போதுமானநவீன கருவிகளான பைனாகுலர், துப்பாக்கிகள், இரவு நேரங்களில் கண்காணிப்பை மேற்கொள்ள புது ரகபைனாகுலர் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.
பண்ணாரி அருகே உள்ள முகாமில் தேவராம் மற்றும் ஐ.ஜி விஜயகுமார் ஆகியோர் அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து செவ்வாய்க்கிழமை ஆலேசானை நடத்தினர். இதையடுத்து விரைவில் வீரப்பன் வேட்டை துவங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பன் வேட்டையையடுத்து பொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அதிரடிப்படை சார்பில்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பண்ணாரி, காந்தல், பவானி, நீலகிரி மலை வாழ் மக்களுக்கும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications