சென்னையில் ஒரு பரிதாபச் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொடுத்த நகையைத் திருப்பிக் கேட்டபோது அவதூறாகப் பேசியதால் மனமுடைந்த கணவனும், மனைவியும்விஷம் குடித்தனர். இதில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

சென்னை புறநகரான பல்லாவரத்தில் வசித்து வருபவர் பூப்பாண்டி நாடார். அப்பகுதியில் மளிகைக் கடைவைத்துள்ளார். இவரது மகன் மூர்த்தி (31). மூர்த்தியின் மனைவி தமிழ்ச்செல்வி (25).

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட மூர்த்தியும், தமிழ்ச்செல்வியும் பொழிச்சலூர் பகுதியில்வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர். வீட்டு உரிமையாளரான நடராஜன் குடும்பத்தினர், மூர்த்திகுடும்பத்தினரிடம் நல்ல முறையில் பழகி வந்துள்ளார்.

வெளியூர் செல்ல நேரிடும்போது தங்களது நகைகளை நடராஜன் வீட்டில் கொடுத்து விட்டுப் போவது மூர்த்திதம்பதியினரின் பழக்கம். வீடு திரும்பியதும் நகைககைளப் பெற்றுக் கொள்வர். அதேபோல, சில மாதங்களுக்குமுன்பு தங்களது சொந்த ஊரான கடலாடிக்கு சென்றுள்ளனர். போகும்போது 16 பவுன் நகையை நடராஜன்வீட்டில் கொடுத்துச் சென்றனர்.

கடலாடியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பியதும் தங்களது நகைகளைதிருப்பிக் கேட்டனர். அதற்கு, அவசரமாக பணம் தேவைப்பட்டதால் நகைகளை அடகு வைத்து விட்டோம். எனவேசிறிது பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார் நடராஜன். சிறிது நாட்கள் கழித்து கேட்டபோதும் இதேபோலகூறியுள்ளார் நடராஜன். இதனால் நடராஜனுக்கும், மூர்த்திக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேரு நகரில் வேறு வீடு பார்த்துக் குடி போனார் மூர்த்தி. அதன் பிறகு மீண்டும் நடராஜனிடம்நகையைக் கேட்டுள்ளார் மூர்த்தி. ஆனால் அதற்கு, நகையைத் திருப்பித் தர முடியாது. மீறிக் கேட்டால் தமிழ்ச்செல்விக்கும், எனது மகன் பாரதி மோகனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருக்கிறது என ஏரியா முழுவதும்செய்தியைப் பரப்புவேன். அதற்குப் பிறகு நீ வெளியே தலை காட்ட முடியாது என்று நடராஜன் மிரட்டியதாகத்தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற மூர்த்தி மன வேதனையுடன் வீடு திரும்பினார். மனைவியிடம் நடந்ததைத்க கூறினார்.அவரும் அதிர்ச்சியடைந்தார். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் இருவரும் தற்கொலைசெய்து கொள்ள முடிவெடுத்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாக போலீஸாருக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் அருந்தினர்.

இருவரும் விஷம் அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த பக்கத்து வீட்டில் குடியிருக்கும்அதிமுக பிரமுகர் ரூபன் இன்பராஜ் உள்ளிட்ட பலர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்ச் செல்வி இறந்தார். மூர்த்தி உயிருக்குப் போராடி வருகிறார்.அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பரிதாபச் சம்பவம் குறித்து செங்கல்பட்டு போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+