நிலக்கரி ஊழல்: முன்னாள் எரிசக்தித்துறை செயலர் சாட்சியம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான நிலக்கரி ஊழல் வழக்கில், முன்னாள் எரிசக்தித்துறை செயலாளர் சூசன் மாத்யூஇரண்டாவது தனி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சாட்சி அளித்தார்.
அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழக மின்சார வாரியத்துக்காக வெளிநாடுகளிலிருந்து நிலக்கரிஇறக்குமதி செய்ததன் மூலம், அரசுக்கு ரூ 6.5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முதல்வர் ஜெயலலிதா,முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.வி.வெங்கட்ராமன், ஹரிபாஸ்கர், நாராயணன்,சி.ராமச்சந்திரன் உள்ளிட்ட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி தார்வேஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு செவ்வாயக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் எரிசக்தித்துறை செயலாளர் சூசன்மாத்யூ சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டுவரைநான் எரிசக்தித்துறை செயலாளராக இருந்தேன்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் எனக்கு தெரியும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதமிழக மின்சார வாரிய கணக்கு உறுப்பினர் ஏ.கே. ராஜேந்திரன், மின் உற்பத்தி உறுப்பினர் ராமசாமி. மின்விநியோக உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதி வேண்டி சி.பி.சி.ஐ.டி, போலீசார்கோப்பு அனுப்பினர்.
இந்த கோப்பை பரிசீலித்து ஆளுனர், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி, 409 மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம் 13(1) (சி)(சிடி) உடன் இணைந்த 13(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர அனுமதியளித்தார்.
1997ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி அரசாணை பிறப்பித்தார். அந்த அரசாணையில் நான்கையெழுத்திட்டுள்ளேன் என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications