ஆந்திராவில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள கம்மனபள்ளியில் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பலியானார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், கம்மனபள்ளி கிராமத்தில் போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும்இடையே சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 9 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் 3 பேர் பெண்கள்.
துப்பாக்கிச்சூட்டில் பலியான தீவிரவாதிகளின் பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்களை அடையாளம்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவர்கள் மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாச்சூட்டில் பலியான போலீஸ் கான்ஸ்டபிளின் பெயர் பீமுடு என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த 2 வது மிகப்பெரிய மோதலாகும்இது. கடந்த ஜூன் 9 ம் தேதி போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆந்திராவில் தீவிரவாதிகள் அடிக்கடி பல ஊர்களில் புகுந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.
போலீஸ் உளவாளிகள் என்ற சந்தேகத்தில் மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்தவெள்ளிக்கிழமை அதே அமைப்பைச் சேர்ந்த 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
இந்த வருடம் மட்டும் மக்கள் போர்ப்படை வீரர்கள் 47 பேரைக் கொலை செய்துள்ளனர். நக்ஸலைட் தீவிரவாதிகள்தாக்குதலில் 150 பேர் உயிரிழந்துள்ளனர் என்றனர்.
முன்னதாக, 1980 ம் ஆண்டு மக்கள் போர்ப்படை குழு உருவாக்கப்பட்டது. பள்ளி ஆசிரியராக இருந்தகொண்டப்பள்ளி சீதாராமய்யா இந்தக் குழுவை அமைத்தார். அதன்பிறகு ஆந்திராவில் பழங்குடி மக்கள் அதிகம்வசிக்கும் பகுதி, ஒரிசா மற்றும் மத்திய பிரதேசத்தில் இவ்வியக்கம் வளர ஆரம்பித்தது.
இவ்வியக்கத்தில் உள்ள தீவிரவாதிகள், மிகப்பெரிய ஜமீன்தார்கள் உள்பட பெரும் பணக்காரர்களைக் குறிவைத்துதாக்குதல் நடத்தி பணிம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். அதுமட்டுமின்றி ஜமீன்தார்களின் நிலங்களைஆக்கிரமிக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த தாக்குதலில்இதுவரை 6,000 மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications