வி.சி.பொருளாளர் கொலை: மதுரை அருகே பஸ் எரிப்பு
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பஸ்ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.
மதுரை முடக்கத்தான் கிராமத்தை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் பாண்டி.முன்விரோதம் காரணமாக பாண்டி திங்கள் கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக கலவரம் ஏற்படக்கூடும் என கருதி அந்த பகுதியில் போலீஸ் காவல்பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மதுரையிலிருந்து கருவனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றது.அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அந்த பேருந்து மதுரைக்கு திரும்புவதற்கு முன் கிராமத்தில் சிறிது நேரம்நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது தீடீரென 20 பேர் கொண்ட கும்பல் பேருந்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது.
தகவல் கிடைத்த போலீசாரும். தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப்படையினரால் தீ அணைக்கப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்திய போது பேருந்துக்கு தீ வைத்த கும்பல் கருவனூர் கிராமத்தில் ஒளிந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் மந்திக்குளம் கண்மாயில் ஒளிந்திருந்த முத்து, கண்ணன், முருகன், முத்துகிருஷ்ணன்,பாலாறு, செல்வம், பெரியசாமி, மலைச்சாமி, கருப்பையா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில்தெரிய வந்தது. பாண்டி கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக பேருந்துக்கு தீ வைத்ததாக அவர்கள்போலீசாரிடம் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறுமதுரை மாவட்ட டி.ஐ.ஜி. மகேந்திரன் உத்தரவிட்டார்.
மதுரையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவுபிறப்பித்து டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications