அமெரிக்காவுக்கு இன்னும் 4.5 லட்சம் சாப்ட்வேர் நிபுணர்கள் தேவை
நியூயார்க்:
அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், சாப்ட்வேர் நிபுணர்களுக்கு அங்கு இன்னும்வாய்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப அமைப்பு சமீபத்தில் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 4.5 லட்சம்காலியிடங்கள் சாப்ட்வேர் நிபுணர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனவாம்.
இன்னும் சொல்லப் போனால், கணக்கெடுப்பின் போது 9 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட தயாராகஇருந்துள்ளன. ஆனால் உரிய திறமை வாய்ந்த நிபுணர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், பாதி காலியிடங்களைக்குறைத்தே கணக்கெடுத்துள்ளனர்.
தற்போது அமெரிக்கா முழுவதும், சுமார் 1 கோடியே 4 லட்சம் சாப்ட்வேர் நிபுணர்கள் நிறைந்து இருக்கிறார்கள்.இவர்கள் அனைவருமே சாப்ட்வேர் கம்பெனிகளில் மட்டும்தான் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
இப்போதெல்லாம் சாப்ட்வேர் அல்லாத கம்பெனிகளுக்குக்கூட நிறைய சாப்ட்வேர் நிபுணர்கள்தேவைப்படுகின்றனர். உண்மையில், சாப்ட்வேர் அல்லாத கம்பெனிகள்தான் அதிக சாப்ட்வேர் நிபுணர்களைவேலைக்குச் சேர்க்கிறார்கள்.
சாப்ட்வேர் கம்பெனிகளைவிட, 10 சதவிகிதம் அதிகமான சாப்ட்வேர் நிபுணர்களை சாப்ட்வேர் அல்லாதகம்பெனிகள் நியமிக்கின்றன. வேலைவாய்பை கணக்கில் கொண்டு பார்த்தால், அமெரிக்காவில் 1 சாப்ட்வேர்கம்பெனிக்கு 22 சாப்ட்வேர் அல்லாத கம்பெனிகள் உள்ளன.
சாப்ட்வேர் அல்லாத கம்பெனிகளில், கிட்டத்தட்ட 95 லட்சம் சாப்ட்வேர் நிபுணர்கள் வேலைக்காகஅமர்த்தப்பட்டுள்ளனராம்.
அதனால், என்னதான் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பாதிப்பு இருந்தாலும்ம்ங்கு சாப்ட்வேர்நிபுணர்களுக்கு இன்னும் "டிமாண்ட்" இருக்கத்தான் செய்கிறது.
அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்த "டிமாண்ட்" இருந்து கொண்டே இருக்கும். நிறைய அமெரிக்க கம்பெனிகள்தங்களுடைய "சாப்ட்வேர் நிபுணர் வேட்டை"யை ஆரம்பித்து விட்டனர்.
கடந்த ஆண்டும் இதுபோலவே இந்த அசோசியேஷன் கணக்கெடுப்பை நடத்தியது. "இடைவெளியை இணைக்க"என்ற தலைப்பில் நடந்த அப்போதைய கணக்கெடுப்பில், 16 லட்சம் சாப்ட்வேர் வேலை வாய்ப்புகள் வந்தன.ஆனாலும், வலையில் விழுந்தவர்கள் 7.5 லட்சம் பேர்தானாம்!
ஐ.ஏ.என்.எஸ்.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications