வீரப்பன் வேட்டையை துவக்கினார் தேவாரம்
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை வீரர்களுடன் ஆலோசனைநடத்துவதற்காக, புதன்கிழமை கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம் விமானம் மூலம் சென்னையிலிருந்துகோயம்புத்தூர் வந்து சேர்ந்தார்.
வீரப்பன் வேட்டையைத் துவங்க இரு மாநில அதிரடிப்படையின் தலைவர் தேவாரம் இன்று (புதன்கிழமை) கோவைவந்து சேர்ந்தார். அவர், கோவை மாநகர கமிஷனர் மற்றும் எஸ்.பியுடன் ஆலோசனை நடத்தினார்.
நாளை முதல் வீரப்பன் வேட்டை:
வீரப்பன் வேட்டையை நாளை (வியாழன்) முதல் தேவாரம் துவக்குகிறார். இந்த முறை புதிய யுக்திகளுடன்களம் இறங்குகிறார் தேவராம்.
கோவை மாவட்டத்திலிருந்தோ அல்லது ஈரோடு மாவட்டத்திலிருந்தோ தேவாரம் வீரப்பனைப் பிடிக்க வியூகம்வகுக்கிறார். இது குறிதது ஆலோசனை நடத்த கோவைக்கு வருகை தந்தார். தேவாரம், கோவை மாவட்ட எஸ். பி.,சொக்கலிங்கம் மற்றும் போலீஸ் கமிஷனர் நரேந்திரபால் சிங் ஆகியோருடன் ஆலோசனையைத் துவக்கினார்.
கோவையிலிருந்து எந்த வழியாக காட்டுக்குள் செல்ல வேண்டும் என்பதை தேவாரம் முடிவு செய்வார். முன்னதாகவீரப்பன் இருக்கும் இடம் குறித்து அறிய உளவுத் துறையினர் முடுக்கி விடப்படுவர். இவர்களின் துப்புகிடைத்ததற்கு பிறகு அந்த இடத்திலிருந்து தேவாரம் தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.
இந்த நிலையில், வீரப்பன் எங்கு உள்ளான் என்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது. விரைவில் வேட்டையைத்துவக்குவேன் என கோவையில் நிருபர்களிடம் கூறினார்.
நிருபர்களிடம் பாய்ந்தார் தேவாரம்:
முன்னதாக அதிரடிப்படையின் தலைவர் தேவாரம், புதன்கிழமை பிற்பகல் கோவை வந்து சேர்ந்தார். அவரைவிமான நிலையத்தில் நிருபர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தனதுமைக்கை தேவாரத்தின் முன்பு நீட்டினார். அதனைப் பார்த்த தேவாரம், கையால் மைக்கைத் தட்டி விட்டார்.
ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என அந்த நிருபர் கேட்டதற்கு, "நான் இப்படித் தான் நடந்து கொள்வேன் எனதேவாரம் கோபத்துடன் கூறி விட்டு வேகமாச் சென்று விட்டார்.
முன்னதாக, தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சியமைத்த பின், தமிழக, கர்நாடக அரசுகளுக்கு மிகப்பெரியதலைவலியாக இருக்கும் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம், இரு மாநில கூட்டு அதிரடிப்படை தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதுநினைவிருக்கலாம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications