அதிரடிப்படைக்கு கேரளா உதவி
திருவனந்தபுரம்:
வீரப்பனைப் பிடிக்க முயற்சித்து வரும் தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படைக்கு கேரள போலீசாரும் உதவிவருகின்றனர்.
வீரப்பன் விவகாரம் குறித்து கேரளத்துடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இத்தகவலை கேரள முதல்வர் அந்தோணி நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார். அவர் கூறுகையில், இருஅரசுகளும் இவ்விஷயத்தில் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றன. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதைவெளியில் கூற முடியாது என்றார்.
கேரளக் காட்டுப் பகுதியில் வீரப்பன்:
இதற்கிடையே வீரப்பன் கேரள காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதையடுத்து தமிழகஅதிரடிப்படையின் ஒரு பிரிவு கேரள காட்டுக்குள் புகுந்துள்ளது.
கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் கருணாநிதி ஆட்சியிலும் தமிழகமும் கர்நாடகமும் மட்டுமே வீரப்பனைத் தேடும்பணியில் தீவிரம் காட்டின. ஆனால், இம்முறை ஆட்சியைப் பிடித்துள்ள ஜெயலலிதா, கேரள அரசுடனும் தொடர்ந்துதொடர்பு கொண்டு வருகிறார். கேரள போலீசாரும் இந்த வீரப்பன் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை வீரப்பன் சுமார் 2,000 யானைகளைக் கொன்று குவித்துள்ளான். ராஜ்குமார் உள்படநூற்றுக்கணக்கானவர்களைக் கடத்தியுள்ளான். இதில் பலரைக் கொன்று குவித்துள்ளான்.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications