அசாமில் பந்த்: மணிப்பூரில் பதட்டம் தொடர்கிறது
கவுஹாத்தி:
மணிப்பூரில் திங்கள்கிழமை நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, அசாமில் புதன்கிழமை 48 மணி நேர பந்துக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
நாகலாந்து தேசியவாத சோஷலிஸ்டு கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர்.இம்மாநிலத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம், மணிப்பூர் மாநிலத்தில் நாகர்கள் வசிக்கம் பகுதிக்கும்அமல்படுத்தப்பட்டது. பிறகு, அது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதை எதிர்த்த நாகலாந்து தேசியவாத சோஷலிஸ்டு கவுன்சிலைச் சேர்ந்தவர்கள், கடந்த 3 நாட்களாக பந்த் நடத்திவந்தனர். இது திங்கள்கிழமை வன்முறையாக வெடித்தது.
தடையை மீறிய கலவரக்காரர்கள், தலைநகர் இம்பாலில் உள்ள தலைமைச் செயலகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏஅலுவலகங்களுக்குத் தீ வைத்தனர். சபாநாயகர் அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இதில் சபாநாயகர்படுகாயமடைந்தர். 5 எம்.எல்.ஏக்களும் காயமடைந்தனர்.
மணிப்பூர் காங்கிரஸ் கட்சி, மணிப்பூர் மக்கள் கட்சி அலுவலகங்களும் கலவரக்காரர்களால் தீ வைத்துகொளுத்தப்பட்டன. கலவரக்காரர்கள் தலைவர்களின் உருவ பொம்மையையும் எரித்தனர். பின்னர் அவர்கள்கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டதையடுத்து அங்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டது.
அன்று நடந்த கலவரத்தில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அதன்தலைநகர் இம்பாலில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப் பட்டுள்ளது.
ராணுவம், போலீஸ், கமாண்டோக்கள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் அனைவரும் இம்பால் முழுவதும் கொடிஅணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். தலைநகரில் நிலைமை முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதிலும்,ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து நடப்பதாகக் கூறப்படுகிறது.
மணிப்பூர் கலவரம் அசாம் மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. நாகர்களின் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக, இங்கும்48 நேர பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 5 மணிக்கு பந்த் ஆரம்பித்தது.
கர்பி ஆங்லாங் மற்றும் சாச்சர் ஹில்ஸ் போன்ற மாவட்டங்கள் இந்தப் பந்தில் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.இங்குள்ள அனைத்துக் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுக் கிடந்தன. சாலைப் போக்குவரத்துமுழுவதுமாக ஸ்தம்பித்துப் போய்விட்டது.
மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியும் இந்தப் பந்தினால் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
அசாம்-நாகலாந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நாகலாந்திலிருந்துதீவிரவாதிகள் அசாமிற்குள் ஊடுறுவ வாய்ப்புள்ளதால், பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் ரோந்து சுற்றிவருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications