கற்பனை கதாபாத்திரமான குரங்குமனிதன்
டெல்லி:
டெல்லி போலீசார் குரங்குமனிதன் என யாருமே இல்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.
கடந்தமாதம் டெல்லியில் குரங்கு மனிதன் மக்களை தாக்கி காயப் படுத்தப்படுவதாக வந்த தகவல்களையடுத்துபோலீசார் குரங்குமனிதனை தேடி வந்தனர்.
கிழக்கு டெல்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் குரங்குமனிதன் இரவில் மேல் மாடியில் படுத்திருக்கும் மக்களைதாக்கி காயப்படுத்துவதாகவும், நகத்தால் கீறி காயப்படுத்துவதாகவும் மக்கள் கூறி வந்தனர்.
குரங்கு மனிதனை யாரும் பார்த்ததாக கூறவில்லை. இருந்தாலும் குரங்கு மனிதனை பார்த்ததாக கூறிய சிலர் குரங்குமனிதனின் மார்பு பகுதியிலிருந்து ஒளி வந்தது. அவன் கூரை விட்டு கூரை தாவி செல்கிறான். வந்தது போலவேவேகமாமவே மறைந்து விட்டான் என்று கூறி வந்தனர்.
குரங்கு மனிதன் பயத்தில் 1 கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் இறந்து போனார்கள். 74 பேர் குரங்குமனிதனால்தாக்கப்பட்டதாக கூறி காயங்களுடன் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கு மனிதன் தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்ட பகுதியில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டது குரங்குமனிதன் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ 50.000 பரிசு வழங்கப்படும் எனவும் போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குரங்கு மனிதன் என யாருமே இல்லை என போலீசார் கூறியுள்ளனர். போலீசார்தடய அறிவியல் வல்லுனர்கள் மற்றும் மன நல மருத்துவர்கள் மூலம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்குரங்குமனிதன் என்பது மக்களின் கற்பனையில் உருவான கற்பனை பாத்திரம்தான் என கூறுகின்றனர்.
இது குறித்து டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் சுரேஷ் ராய் கூறுகையில் குரங்கு மனிதன் என்று யாரும்கிடையாது.
குரங்கு மனிதன் குறித்த பீதியை பரப்பிவிட்டது பத்திரிக்கைகள்தான். குரங்கு மனிதன் என யாரும் கிடையாது. இதுமக்களின் கற்பனைதான்.
குரங்கு மனிதனால் 74 பேர் காயமடைந்ததாக கூறின. ஆனால் அவை எல்லாம் குரங்கு மனிதனால் ஏற்பட்டகாயமே அல்ல.
குரங்கு மனிதன் பற்றிய விஷயத்தை பத்திரிக்கைகளும் பெரிதுபடுத்திவிட்டன. இந்த விஷயத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விட்டது.
குரங்குமனிதன் தாக்குவதாக கூறப்பட்ட பகுதிகளில் போலீஸ் காவல் போட்டப்பட்டதும் மக்கள் மேலும் பயந்துபோனார்கள்.
முதலில் குரங்குமனிதன் தாக்குதல் பாகிஸ்தானியரின் வேலை என கூறி வந்தனர். அதை நாங்கள் முற்றிலும்மறுத்தோம். மேலும் சிலர் குரங்கு மனிதன் முஸ்லிம்களை மட்டுமே தாக்குவதாக கூறி இந்த விஷயத்திற்கு மத சாயம்பூச முனைந்தனர்.
மேலும் சிலர் இதில் ஒரு கும்பலே ஈடுபட்டுவருவதாக கூறி வந்தனர். ஆனால் இது எதுவுமே உண்மை இல்லைஎன்றார்.
டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் கூறுகையில் . இதில் போலீசாரின் நேரம்வீணடிக்கப்பட்டது என்றாலும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது எங்கள் கடமை இன்னமும்குரங்குமனிதன் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றார்.
ஆனாலும் பல மக்கள் போலீசை குறை கூறுகின்றனர். போலீசார் மக்களின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக,கற்பனையை அதிகரிக்கும் விதமாக நடந்து கொண்டனர் என கூறுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications