For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியாகிறார் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

Musharafபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் அந் நாட்டின் ஜனாதிபதியாகஇன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார்.

தற்போது அதிபராக இருக்கும் ரபிக் தரார் பதவிவிலகத் தயாராகிவிட்டார்.

இது குறித்து உருது நாளிதழான ஜாங் பத்திரிக்கையிலும், ஆங்கில நாளிதழான திநியூசிலும் கூறப்பட்டிருப்பதாவது:

முஷாரபுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இர்ஷத்ஹசன் கான் அதிபராக பதவி பிரமாணம்செய்து வைப்பார்.

இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த முஷாரப் இந்தியா வர உள்ள நிலையில்அவர் அந் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்பேச்சுவார்த்தையின்போது இந்தியப் பிரதமருக்கு இணையான பதவியில் அமர்ந்துமுஷாரப்பால் பேச முடியும்.

இந்தியாவின் அரசியல்சாசனப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருடன் பேசவரும்போது வெறும் நியமனப் பதவியான ராணுவத் தளபதியாக (ஆட்சியாளர்)இருந்து பேசுவதை முஷாரப் விரும்பவில்லை. இதனாலேயே அவர் பாகிஸ்தான்அரசியல்சாசனப்படி உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை ஏற்கத்திட்டமிட்டுள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு அக்டோபரில் ராணுவ ஆட்சியாளராகப் பதவியேற்ற முஷாரப்இரு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தி ஜனநாயகரீதியிலான அரசை ஆட்சியில்அமர்த்துவேன் என உறுதியளித்திருந்தார்.

அதற்கான கெடு நெருங்கி வந்த நிலையில் இப்போது தன்னையே ஜனாதிபதியாகவும்அவர் பிரகனடனப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்பும்என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முஷாரப்.

2 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியை ராணுவப்புரட்சி மூலம் திடீரென கவிழ்த்தார் பர்வேஸ். ஷெரீபை சிறையில் அடைத்துவிட்டுஆட்சியாளரானார். பின்னர் ஷெரீபை நாடு கடத்தினார். இப்போது அவர்குடும்பததுடன் செளதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்தியா வருகை:

பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்தவதற்காக பர்வேஸ் முஷாரப் அடுத்தமாதம் 14ம் தேதி இந்தியா வருகிறார் என செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஆக்ராவில் சந்தித்துப் பேசுகிறார்கள்.

இந்தியா வரும் பர்வேஸூக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்படும்.அதன்பின் அவர் ஆக்ரா செல்வார். அங்கு வாஜ்பாயுக்கும், முஷாரஃபுக்கும் இடையேபேச்சுவார்த்தை நடைபெறும்.

முஷாரஃப் ஆஜ்மீரில் இருக்கும் காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவுக்கு சென்றுவழிபடுவார்.

16ம் தேதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார். இந்தியாவில் இருக்கும்போது அவர்ஆஜ்மீருக்கும் செல்வார். இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைஎவ்வளவு நேரம் நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் இன்னும்முடிவுசெய்யப்படவில்லை.

பாகிஸ்தானின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் டெல்லிக்குவரவிருக்கிறார்கள்.

சென்ற மே மாதம் 25 ம் தேதி வாஜ்பாய், முஷாரஃபை பேச்சுவார்த்தைக்கு வருமாறுஅழைப்பு விடுத்தார். அதை முஷாரஃபும் ஏற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த போது, வாஜ்பாய் வரலாற்றுசிறப்பு மிக்க லாகூர் பஸ் பயணத்தை மேற்கொண்டார். ஆனால் பர்வேஸ் முஷாரப்தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்ததால்கார்கில் பகுதியில் நடைபெற்ற சண்டையால் வரலாற்று சிறப்பு மிக்க அந்த பயணம்பலனளிக்காமல் தோல்வியடைந்தது.

அதன் பின் மீண்டும் இரு நாட்டுதலைவர்களும் இப்போது மீண்டும்சந்திக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்க்கது.

ஐ.ஏ.என்.எஸ் - யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X