பாகிஸ்தான் ஜனாதிபதியானார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப், அந்நாட்டின் 10வது ஜனாதிபதியாக புதன்கிழமை மாலை4.30 மணிக்குப் பதவியேற்றார்.
அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இர்ஷத்ஹசன் கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாகப் பதவிஏற்ற போதிலும் முஷாரப்பே நாட்டின் ராணுவ ஆட்சியாளராகவும், ராணுவ தலைவராகவும் தொடர்ந்து நீடிப்பார்.
நிதி அமைச்சராக இருந்த ஷாவுக்கத் ஆசிஸ் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தையும், மாகாண சட்டசபைகளையும்கலைத்துவிட்டார்.
முன்னதாக, ஜனாதிபதியாக இருந்த ரபிக் தரார், தன் பதவியை ராஜினாமா செய்தார். இவர் 1998ம் ஆண்டு ஜனவரி1ம் தேதி பாகிஸ்தானின் 9வது ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்.
பதவி ஏற்பு விழாவிற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர், அவரை இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் பேச்சின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானில் இதற்கு முன், 3 ராணுவ ஆட்சியாளர்கள் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ளனர். ஆயுப் கான்,ஜெனரல் யாஹ்யா கான், ஜெனரல் ஜியா-உல் ஹக் ஆகியோர் வழியில், ராணுவ ஆட்சியாளராக இருந்து, முஷாரப்ஜனாதிபதி பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பைப் பதவியிலிருந்து தூக்கிஎறிந்து விட்டு, ராணுவ ஆட்சியாளரானார் முஷாரப்.
2002ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு அப்புறம்தான், முஷாரப் நாட்டின் ஜனாதிபதி ஆவார்என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டு, ரபிக்தராரை ராணுவ மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, நாட்டின் 10வது ஜனாதிபதியாகப்பொறுப்பேற்று விட்டார் முஷாரப்.
இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த முஷாரப் ஜூலை 14ம் தேதி டெல்லி வரவுள்ளார். இந்நிலையில்,அவர் அந் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பேச்சுவார்த்தையின்போதுஇந்தியப் பிரதமருக்கு இணையான ஒரு பதவியில் அமர்ந்து முஷாரப்பால் பேச முடியும்.
இந்தியாவின் அரசியல் சாசனப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருடன் பேச வரும்போது வெறும் நியமனப்பதவியான ராணுவத் தளபதியாக (ஆட்சியாளர்) இருந்து பேசுவதை முஷாரப் விரும்பவில்லை. இதனாலேயேஅவர் பாகிஸ்தான் அரசியல்சாசனப்படி உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இந்தியா வருகை
இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்தவதற்காக பர்வேஸ் முஷாரப் ஜூலை மாதம் 14ம் தேதிஇந்தியா வருகிறார். இருவரும் ஆக்ராவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
முஷாரஃப் ஆஜ்மீரில் இருக்கும் காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவுக்கு சென்று வழிபடுவார்.
16ம் தேதிவரை இந்தியாவில் தங்கியிருக்கும் முஷாரப், இந்தியப் பிரதமருடன் எவ்வளவு நேரம் பேச்சுவார்த்தைநடத்துவார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.
அதற்கு முன்பாக, பாகிஸ்தானின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வரவுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications