மதுரையில் ஜூன் 22ல் விடுதலை சிறுத்தைகள் பந்த்
மதுரை:
மதுரை மாவட்டத்தில் இம்மாதம் 22ம் தேதி பந்த் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கஅமைப்பாளர் திருமாவளவன் கூறினார்.
இந்த இயக்கத்தின் மாநில பொருளாளர் பாண்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்த பந்துக்கு அழைப்புவிட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் அன்றுஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிருப்பதாக அவர் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
பாண்டியின் கொலைக்கு முன்விரோதம் என்று போலீஸார் கூறுவது தவறு. எங்கள் இயக்கத்தை முடக்க வேண்டும்என்ற எண்ணத்துடன்தான், சில சாதி அமைப்புகள் இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியுள்ளனர். தவிர,கூலிப்படையினரையும் இதற்காக ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலவளவு கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகக்கருதுகிறோம்.
எங்கள் இயக்க முன்னணித் தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமானால், சென்னையில் மாநில அளவில் பேரணி, ஆர்ப்பாட்டம்நடத்துவோம்.
கொலை செய்யப்பட்ட பாண்டியின் குடும்பத்துக்கு வன்முறைக் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம்நிவாரணம் வழங்க வேண்டும். அவருடைய மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும் என்றார்திருமாவளவன்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications