இலங்கை: நீதிமன்றம் Vs
கொழும்பு:
சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து செயல்படப்போவதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரும், அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் சகோதரருமான அனுரா பண்டாரநாயகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் உள்பட யாருக்கும் தலையிடும்அதிகாரம் கிடையாது. நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு யாரும் கட்டுப்பாடுகளோ, வரைமுறைகளோ விதிக்கமுடியாது.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தொடர்பாகவும், பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானதுதொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சரத் சில்வாவை விசாரிக்க விசாரணைக் கமிட்டி அமைக்கப்படும்என்று கூறினார்.
சபாநாயகரின் இந்தப் பேச்சை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் பாராட்டியுள்ளனர்.
முன்னதாக, இலங்கையில் சந்திரிகா அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சரத் சில்வா செயல்பட்டுவருவதாகவும், அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிகுற்றம்சாட்டி வந்தது.
மேலும் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசுக்கு எதிராக இந்த வார இறுதியில் நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது.
கடந்த 6 ம் தேதி ஐக்கிய தேசிய கட்சி இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, நாடளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது.தலைமை நீதிபதி மேல் கூறப்பட்டுள்ள புகார் குறித்து கமிட்டி ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் கோரியது.
ஆனால், அதே நாளில் தலைமை நீதிபதி மேல் எழுப்பப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணைக்கமிட்டி அமைக்கக் கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு (அனுரா பண்டாரநாயக்காவுக்கு) 3பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் நாடாளுமன்ற சபாநாயகரான அனுரா பண்டாரநாயகா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஆதரிப்பதா என்றகேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் சந்திரிகா குமாரதுங்காவும், அனுரா பண்டாரநாயகாவும் கடந்த ஜூன் 10 ம் தேதி சந்தித்துப் பேசினர்என்று பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். தனது சகோதரரான அனுராபண்டாரநாயகாவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார் சந்திரிகா என்ற குற்றச்சாட்டையும்மறுத்தார்.
இதற்கிடையே, தலைமை நீதிபதி சரத் சில்வாவை விசாரிக்க கமிட்டி அமைக்க சுப்ரீம் கோர்ட் சபாநாயகருக்குத்தடை விதித்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனதா விமுக்தி பெருமூனா கட்சியும் சேர்ந்துநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் கூறுகையில், சுப்ரீம்கோர்ட் நாடாளுமன்றவிதிமுறைகளுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதியைவிசாரிக்க கமிட்டி அமைக்க சுப்ரீம்கோர்ட் சபாநாயகருக்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை சபாநாயகர்அனுரா பண்டாரநாயகா நிராகரிக்க வேண்டும்.
இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககோருவோம். சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் நாடாளுமன்ற விதிமுறைகளையும், மரபுகளையும் மீறுகிறார்கள் என்றுகுற்றம்சாட்டினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications