ஸ்டாலினை அலட்சியப்படுத்திய அவைக்காவலர்கள்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், குடிநீர் விநியோகம் குறித்து அதிமுக மற்றும் தமாகா கவுன்சிலர்கள் கேள்விஎழுப்பியதையடுத்து ரகளை ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் புதன்கிழமை காலை மேயர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. கூட்டம்தொடங்கியதும், அதிமுக கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் மற்றும் தமாகா கவுன்சிலர் வெற்றிவேல் ஆகியோர்சென்னை நகரில் குடிநீர் விநியோகப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்படிக் கூறினர்.
இதையடுத்து, மேயருக்கும், எதிர்க்கட்சிக் கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்எதிர்க்கட்சிக் கவுன்சிலர்கள் மேயர் இருக்கையை நோக்கி எழுந்து ஓடி வந்தனர். இதையடுத்து சபையில் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டது.
உடனடியாக, சபையில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிக் கவுன்சிலர்களை வெளியேற்றும்படி மேயர் ஸ்டாலின்அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அவைக் காவலர்கள் யாரும் மேயர் ஸ்டாலின் உத்தரவை கண்டுகொள்ளவேயில்லை. இதையடுத்து,தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.
சபை ஒத்திவைக்கப்பட்டதும் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், புதன்கிழமை காலை மாநகராட்சிக் கூட்டம்தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் பலர் சென்னையில் குடிநீர் விநியோகப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்படிக் கூச்சலிட்டனர். அவர்களை இருக்கையில் அமரும்படிக் கூறியதைக்கண்டுகொள்ளாமல் மாநகராட்சி மரபை மீறி செயல்பட்டனர்.
புதன்கிழமை மாநகராட்சிக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தன. எதிர்க்கட்சியினரின்அமளிதுமளியால் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தீர்மானம் எதுவுமே நிறைவேற்றப்படாமல் மாநகராட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதுஇதுவே முதல்முறை என்றார்.
முன்னதாக, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிவேல் கூறுகையில், பிரச்சனையைத் தீர்த்து வைக்கக் கோரிநாங்கள் கேள்வி எழுப்பினோம். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள்.
சபையில் அடிதடியோ, சண்டை சச்சரவோ எதுவும் நடைபெறாத பட்சத்தில் எங்களை வெளியேற்றும்படிக் கூறுவதுஎப்படி நியாயமாகும் என்றார்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications