சுதாகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின்முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இந்த மாதம் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் நற்பணி மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தமன்ற நிர்வாகி கோபு ஸ்ரீதர் என்பவரை தாக்கியது தொடர்பாக சுதாகரன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருட்கள் வைத்திருந்ததாகவும் அவர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன்னனை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என கேட்டு சென்னை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் மன்றத்தில்சுதாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரன்தரப்பில் ஆஜரான வக்கீல்,சுதாகரன் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் வழக்கு உள்ளது. அந்தவழக்கிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவிருப்பதால் இந்த வழக்கை இம்மாதம் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இந்த மாதம் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சுதாகரனின் தந்தை விவேகானந்தன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முதலாவது கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சின்னப்பன், விவேகானந்தன் மனு மீதான உத்தரவை புதன்கிழமைபிறப்பிப்பதாக தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications