"மெகா போய் "மஹா வந்தது!
சென்னை:
சன் டிவியில் புதிதாக ஒரு மஹா சீரியல் துவங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்தநேரத்தில் சூலம் என்ற மஹா சீரியலை ஒளிபரப்பத் துவங்கியுள்ளனர்.
சினிமா சுவலட்சுமி இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். ரொம்ப நிதானமாக ஆரம்பித்து, ரொம்ம்ம்ம்ம்ப நிதானமாக முடிக்கிறார்கள். டைட்டிலே ஒருஐந்து நிமிடம் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சீரியல்களுக்கான கதையைத் தேடுவதுதான் ஒரு பிரச்சினையே இல்லையே. எனவே, பார்வதிபுரம் என்ற குக்கிராமத்தில் இறையருளுக்கும்,சாத்தானுக்கும் இடையே நடக்கும் பெரும் போர்தான் படத்தின் கதையாம்.
முதல் எபிசோடிலேயே சர்வசாதாரணமாக ஒருவரது தலையை வெட்டி எடுத்து சாக்குப் பையில் கூலாக போட்டுக் கொண்டு போவதாக காட்டுகிறார்கள்.போகப் போக எதெல்லாம் போகுமோ தெரியவில்லை.
வழக்கமாக அரை மணி நேரம்தான் மெகா சீரியல்கள் இருக்கும். ஆனால் சூலம் ஒரு மணி நேரத்திற்கு ஓடுகிறது. இந்த மஹா சீரியலில் குயிலி, ஆனந்த்,பாலாசிங், கே.ஆர்.வத்சலா ஆகியோரும் நடித்துள்ளார்கள். மலையாளத்து மியூசிக் டைரக்டர் ஜான்சன் இசையமைத்துள்ளார். இளவரசன் இயக்கியுள்ளார்.டெலிபோட்டோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications